காலை தலைப்பு செய்திகள் முகநூல்
இந்தியா

Headlines: ரசிகர்களுக்கு அஜித்தின் வேண்டுகோள் முதல் L&T-க்கு ஆனந்த் மஹிந்திராவின் கிண்டல் பதில் வரை!

இன்றைய காலை தலைப்பு செய்தியானது, ரசிகர்களுக்கு அஜித்தின் வேண்டுகோள் முதல் ஆனந்த் மஹிந்திராவின் கிண்டல் பதில் வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.

PT WEB
  • பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள்.

  • தூத்துக்குடி மாவட்ட ஆட்டுச் சந்தைகளில் களைகட்டிய வியாபாரம். எட்டையபுரம், ஆறுமுகநேரி சந்தைகளில் போட்டிப் போட்டிக்கொண்டு கிடாய்களை வாங்கிய வியாபாரிகள்.

  • சென்னை கொளத்தூரில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா. பெரியாரை விமர்சிப்பவர்கள் குறித்து பேசி அடையாளம் காட்ட விரும்பவில்லை என சீமான் பற்றி மறைமுக விமர்சனம்.

  • லிப்ஸ்டிக் அடித்த பேருந்துகளில் மட்டும் மகளிருக்கு இலவசம் என கூறி அரசு ஏமாற்றுவதாக இபிஎஸ் விமர்சனம். மகளிர் பேருந்து பயணத்தை கொச்சைப்படுத்துவதாக இபிஎஸ்க்கு அமைச்சர் எ.வ.வேலு கண்டனம்.

எடப்பாடி பழனிசாமி - எ.வ.வேலு
  • மதுரை - தூத்துக்குடி ரயில்வே திட்டத்தை கைவிடுமாறு தமிழக அரசு ஒருபோதும் கூறவில்லை என்றும், தமிழகத்தின் திட்டத்தை புறக்கணிக்கும் மனப்பான்மையில் மத்திய அரசு செயல்படலாமா என்றும் அமைச்சர் சிவசங்கர் கேள்வி.

  • விமான நிலையத்துக்கு எதிராக போராட்டம் நடத்தும் பரந்தூர் மக்களை சந்திக்கிறார் விஜய். உரிய பாதுகாப்பு வழங்க காவல் துறையிடம் தமிழக வெற்றிக்கழகம் மனு.

  • குடும்பத்தை பார்த்துக் கொள்ளுங்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள் என ரசிகர்களுக்கு நடிகர் அஜித் வேண்டுகோள். பிடித்த விஷயங்களை செய்யும் போது தோல்வி ஏற்பட்டால் சோர்ந்து விட வேண்டாம் என்றும் அறிவுரை.

  • குவைத்தில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமான பயணிகளுக்கு தலைவலியாக மாறிய லக்கேஜ் பிரச்சினை. 100-க்கும் மேற்பட்ட பயணிகளின் உடைமைகளை குவைத்திலேயே விட்டதால் நீடிக்கும் சிக்கல்.

  • மகாராஷ்டிராவில் I.N.D.I.A. கூட்டணிக்குள் அதிகரிக்கும் பிளவு. உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டி என உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணி அறிவிப்பு.

I.N.D.I.A. கூட்டணி
  • தனது மனைவியை பார்த்துக் கொண்டே இருப்பது மிகவும் பிடிக்கும் என எல் அண்ட் டி நிறுவனத்தின் தலைவருக்கு, தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா கிண்டல் பதில்.

  • உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் ரயில் நிலையத்தில் விபத்து ஏற்பட்டதில், கட்டிடம் இடிந்து விழுந்து 20க்கும் மேற்பட்டோர் காயம்.

  • அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 36 ஆயிரம் ஏக்கரை சேதப்படுத்திய காட்டுத்தீ. 12 ஆயிரம் வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள் எரிந்து சேதமடைந்ததால் மக்கள் கவலை.

  • இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு. சூர்யகுமார் தலைமையிலான அணியில் தமிழக வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு.