அமெரிக்க பொருட்கள் மீதான இறக்குமதி வரியை குறைக்க இந்தியா முடிவு செய்துள்ளது. ட்ரம்பின் எச்சரிக்கையை தொடர்ந்து மத்திய அரசு புதுத்திட்டம்...
இந்திய சந்தைகளில் அமெரிக்காவின் பொருட்கள் எதையும் விற்க முடியாத சூழல் உள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் நடவடிக்கைகள் பொதுவெளியில் அம்பலப்படுத்தப்படுவதால் வரிகளை குறைக்க விரும்புவதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்..
மத்திய அரசு அனுமதி கிடைத்ததும் மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக பட்ஜெட்டில் முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
எந்த ரூபத்திலும் மேகதாது அணை கட்டப்பட மாட்டாது என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கிராமப்புற பெற்றோர் பெண் குழந்தைகளை நகரங்களுக்கு அனுப்புவதில்லை என ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார். பெண்களுக்கு போதிய விடுதிகளை ஆட்சியாளர்கள் உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்திட நடவடிக்கை அவசியம் என மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சந்திப்பு... ராஜேந்திர பாலாஜி விமர்சித்த நிலையில், ஆலோசனை...
சென்னை ராயப்பேட்டையில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது... விஜயைக் காண YMCA அரங்கின் தடுப்புகளைத் தாண்டி உள்ளே சென்ற தொண்டர்கள்...
நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை பின்பற்றுவோம் என இஃப்தார் நோன்பு திறப்பில் விஜய் பேச்சு... மனிதநேயம், சகோதரத்துவத்தை பின்பற்றுவோம் எனவும் உறுதி...
எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகளை கூட்டணியில் இணைத்துக்கொள்வோம் என்றும் திமுக மட்டுமே எங்களுக்கு ஒரே எதிரி என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை பெரம்பூரில் முதல்வரின் கலைக்களம் மற்றும் உணவுத் திருவிழாவை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். குணா பட வசனத்தை பேசி முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை மூலம் தென்மாநிலங்களை பழிவாங்க பாஜக முயற்சிப்பதாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றஞ்சாட்டியுள்ளார். மத்திய பாஜக அரசின் நடவடிக்கையின் மூலம் வடமாநிலங்களே அதிக பயன்பெறும் என்றும் விமர்சித்துள்ளார்.
தங்க கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவுக்கு 3 நாட்கள் காவல்... வருவாய் புலனாய்வு இயக்குநரகம் காவலில் எடுத்து விசாரிக்க கர்நாடக நீதிமன்றம் அனுமதி..
மனைவியின் சமாதியை சுற்றி, அழகிய வீடு கட்டி வாழ்ந்து வரும் பேரன்புக் கணவர்... தனி வீடு கட்ட வேண்டும் என்ற மனைவியின் ஆசையை நிறைவேற்றி அவரது நினைவுகளிலேயே வாழ்க்கை நகர்த்தும் நெகிழ்ச்சிச் செயல்...
ஜூனியர் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர்... தமிழக வீரர் பிரணவ் வெங்கடேஷ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்...
கடல் கடந்து லண்டனில் ஒலிக்க இருக்கும் VALIANT SYMPHONY... இசைத்துறையில் புது சாதனையை நிகழ்த்தும் இளையராஜா...