walking reuters
ஹெல்த்

நடைப்பயிற்சி மட்டும் போதாது! எலும்புகள் பலவீனமாவதைத் தடுக்க இதைச் செய்யுங்கள்!

எலும்புகள் பலமாக இருக்க, ரெசிஸ்டன்ஸ் பயிற்சிகளின் அவசியம்!

PT WEB

எலும்புகள் பலவீனமாவதைத் தடுக்க ஸ்குவாட்ஸ், லஞ்செஸ், படிகள் ஏறுதல் போன்ற பயிற்சிகளை நடைப்பயிற்சியுடன் சேர்த்து செய்ய வேண்டும் என எலும்பியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

தினம் 15,000 அடிகள் வரை நீண்ட காலம் நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கும் 'ஆஸ்டியோபீனியா' (osteopenia) எனப்படும் எலும்பு அடர்த்தி குறைபாடு ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நடைபயிற்சி இதய ஆரோக்கியத்திற்கும் உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் சிறந்ததாக இருந்தாலும், 40 வயதிற்குப் பிறகு எலும்புகளின் அடர்த்தி மற்றும் தசைகளின் வலிமையைத் தக்கவைக்க வெறும் நடைபயிற்சி மட்டுமே போதாது என்று எலும்பியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Resistance training

எலும்புகள் மற்றும் தசைகள் பலமடைய எடைகளைத் தூக்கும் 'ரெசிஸ்டன்ஸ் பயிற்சி' (Resistance Training) மற்றும் 'லோடிங்' (Loading) பயிற்சிகள் மிகவும் அவசியமாகும். எனவே, தினமும் ஒரே வகையான நடைபயிற்சியைச் செய்யாமல், ஸ்குவாட்ஸ், லஞ்செஸ், படிகள் ஏறுதல், ஸ்ட்ரெச்சிங் மற்றும் உடலின் சமநிலையைத் தரும் பேலன்சிங் பயிற்சிகளையும் இணைத்துச் செய்ய வேண்டும் என்கின்றனர் எலும்பியல் நிபுணர்கள்.