model image meta ai
ஹெல்த்

புதிய உணவுமுறையை அறிவித்த அமெரிக்கா.. இந்தியாவுக்கு சரிப்பட்டு வருமா? மருத்துவர் சொல்வது என்ன?

புரதங்களையும் நல்ல கொழுப்புகளையும் கொண்ட உணவுகளை அதிகமாகவும், முழு தானியங்களைக் குறைவாகவும் உண்ண அறிவுறுத்தும் புதிய முறையை அமெரிக்கா அறிவித்துள்ளது.

PT WEB

புரதங்களையும் நல்ல கொழுப்புகளையும் கொண்ட உணவுகளை அதிகமாகவும், முழு தானியங்களைக் குறைவாகவும் உண்ண அறிவுறுத்தும் புதிய முறையை அமெரிக்கா அறிவித்துள்ளது. இது இந்தியாவுக்குச் சரிப்பட்டு வருமா? மருத்துவர் சொல்வது என்ன என்பது குறித்து இங்கு காண்போம்.

புரதங்களையும் நல்ல கொழுப்புகளையும் கொண்ட உணவுகளை அதிகமாகவும், முழு தானியங்களைக் குறைவாகவும் உண்ண அறிவுறுத்தும் புதிய முறையை அமெரிக்கா அறிவித்துள்ளது. இது அமெரிக்காவில் கடந்த ஜனவரி 7ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. அமெரிக்கா அறிவுறுத்தியுள்ள உணவுப்பழக்கம் நமது நாட்டுக்கு ஏற்ற ஆரோக்கியமான முறையா என்பதை பார்க்கலாம். இந்திய உணவுப் பழக்கம் என்பது இப்போதைய காலகட்டத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுகள், வறுத்த, பொரித்த உணவுகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டதாக மேற்கத்திய பாணியில் உள்ளது. ஆனால், நமது முந்தைய உணவுப்பழக்கம் என்பது சிறுதானியங்கள், கீரை வகைகள், கோழி, ஆடு, பால் பொருட்கள் போன்றவற்றைக் கொண்டதாக இருந்தது.

அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகள் இப்போது தமது உணவுப் பழக்கத்தில் மிகப் பெரிய மாறுதல்களைச் செய்துள்ளன. மேலிருந்து கீழான பிரமிடு அடிப்படையில் உணவுப் பழக்க முறையை அமெரிக்காவின் சுகாதாரத் துறை அமைச்சர் ஜான் எஃப் கென்னடி ஜூனியர் அறிவித்துள்ளார்.

நார்ச்சத்து அதிகம் கொண்ட உணவுகள், புரதம், பால் பொருட்கள், ஆரோக்கியமான கொழுப்பு உணவுகள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் பரிந்துரைத்துள்ளார். நமது உடலின் தலா ஒரு கிலோ எடைக்கு 1.6 கிராம் புரத உணவை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், சிவப்பு இறைச்சி, பால் பொருட்கள், ஆரோக்கியமான கொழுப்பு உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் இந்தியச் சூழலைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். இந்தியர்களின் உணவில் சுமார் 73 சதவீதம் புரதச்சத்து குறைவாக உள்ளது என்று மருத்துவர் கு.கணேசன் கூறுகிறார்.

model image

மேலும், 10 இந்தியர்களில் 9 பேர் தங்களின் தினசரி புரதத் தேவையை அறியாமல் இருப்பதுடன், பெரும்பாலும் கார்போ ஹைட்ரேட்களைப் புரத ஆதாரங்களாக தவறாக எண்ணுகின்றனர் என்கிறார் அவர். 5 வயதுக்குட்பட்ட இந்தியக் குழந்தைகளில் மூன்றில் ஒருவர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் அமெரிக்கா அறிவித்துள்ள புதிய உணவுமுறை இந்தியாவுக்கும் பொருந்தும் என்பது மருத்துவர் கு.கணேசனின் கருத்து.