ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் போலந்து நாடுகளில் வீணாக்கப்பட்ட நீரில் போலியோ வைரஸ் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் போலியோ வைரஸ் இருப்பை ஒழிக்க வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் 1988 ஆம் ஆண்டு முதல் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது .
உலகில் 2 நாடுகளில் மட்டுமே இன்னும் போலியோ தாக்கம் இருப்பதாக கருதப்பட்டு வந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளில் இன்னும் போலியோ தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளாத தலைமுறைக்கு போலியோ வைரசால் பாதிப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு இருப்பது தெரியவந்துள்ளது. வீணாக்கப்பட்ட நீரில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் நோய்களை தடுப்பதில் எந்த அளவிற்கு முக்கியப் பங்காற்றுகின்றன என்பதையும் இதன் மூலம் அறிய முடிகிறது.