ஜப்பானின் உடல் பருமன் விகிதம் மற்ற நாடுகளை விட மிகவும் குறைவாக இருப்பதற்கு, அங்குள்ள உணவு பழக்கங்களும், வாழ்க்கை முறையுமே முக்கிய காரணிகள் என ஃபிட்னஸ் பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜப்பானியர்கள் அதிகளவிலான காய்கறிகள், மீன் மற்றும் குறைந்த கலோரி கொண்ட உணவுகளை அதிகம் சாப்பிடுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
தினசரி நடைபயிற்சி, பொது போக்குவரத்தை பயன்படுத்துதல், சர்க்கரை கலந்த பானங்கள், துரித மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைவாக உட்கொள்ளுதல் உள்ளிட்ட பழக்கங்களால் உடல் பருமனை அவர்கள் கட்டுப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். ஜப்பானையும் அமெரிக்காவையும் ஒப்பிடும்போது, ஜப்பானில் உடல் பருமன் விகிதம் 6 சதவீதமாகவும், அமெரிக்காவில் 43 சதவீதமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.