உடல் பருமன் முகநூல்
ஹெல்த்

தமிழ்நாட்டில் அதிகரித்த உடல் பருமன் பிரச்சினை; அதிகம் பாதிக்கப்படுகிறார்களா பெண்கள்?

தமிழ்நாட்டில் பெண்களில் அதிகரிக்கும் உடல் பருமன்: அதிர்ச்சி தரும் கணக்கெடுப்பு தகவல்கள்.

PT WEB

தமிழ்நாட்டில் உடல் பருமன் பிரச்சினை கொண்ட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

2015-16ஆம் ஆண்டில் நடைபெற்ற நான்காவது தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு மற்றும் 2019-21ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐந்தாவது தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்புகளின் தரவுகளை ஒப்பிட்டு இந்தத் தகவல் பெறப்பட்டுள்ளது.

2015-16இல் இந்தியா முழுவதும் அதிக உடல் பருமன் கொண்ட பெண்களின் விகிதம் 5.1 சதவீதமாக இருந்தது. 2019-21இல் அது 6.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதிக உடல் எடை கொண்டவர் என்று வகைப்படுத்தப்படக் கூடிய பெண்களின் விகிதம் 15.5 சதவீதத்தில் இருந்து 17.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஓரளவு ஒல்லியாக இருக்கும் பெண்களின் விகிதம் 13.3 சதவீதத்தில் இருந்து 11 சதவீதமாகக் குறைந்துள்ளது. மிகவும் ஒல்லியான பெண்களின் விகிதம் 9.6 சதவீதத்தில் இருந்து 7.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கேரளா ஆகிய தென்னிந்திய மாநிலங்களிலும் டெல்லி, பஞ்சாப் ஆகிய வட மாநிலங்களிலும் அதிக உடல் எடை மற்றும் உடல் பருமன் கொண்ட பெண்கள் அதிகமாக உள்ளனர்.