Headlines
Headlinesfacebook

Headlines|அண்ணாமலையின் விமர்சனம் முதல் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெறும் போப் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, அண்ணாமலையின் விமர்சனம் முதல் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெறும் போப் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
Published on
  • இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களையும் இந்தியர்களாக பாருங்கள் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள். உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்களிடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உறுதி.

  • மத்திய அரசின் கடன் 181 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதென்றால் அடித்த கமிஷன் எவ்வளவு? என அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி.

  • சீர்திருத்தம் என்ற பெயரில் நம்பர் ஒன் கடன்கார மாநிலமாக தமிழ்நாட்டை திமுக மாற்றி வைத்திருப்பதாக அண்ணாமலை பதில்.

  • தமிழ்நாட்டில் உள்ள 47 லட்சம் விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கும் திட்டம். மத்திய அரசு 500 கோடி ரூபாய் நிதி வழங்கும் என்று எதிர்பார்ப்பு.

  • சீமானுக்கு எதிராக நடிகை அளித்த பாலியல் புகாரில் சமரச உடன்பாடு காண உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுரை. தனக்கு ஏற்பட்ட நிலை நாட்டில் யாருக்கும் வரக் கூடாது என்று சீமான் கருத்து.

  • திருவெண்ணெய்நல்லூர் அருகே காதலனுக்கு தேநீரில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்த சம்பவம். குடும்பத்துடன் தலைமறைவாக இருந்த காதலி கைது.

  • நெல்லை வள்ளியூரில் தாய் இறந்த சோகத்திலும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய மாணவன். தைரியமுடன் தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள், எப்போதும் துணை நிற்போம் என அமைச்சர் அன்பில் மகேஸ் ஆறுதல்

  • கருத்து சுதந்திரத்தை உணர்ந்து கொண்டு காவல் துறையினர் செயல்பட வேண்டும் என காங்கிரஸ் எம்பிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த குஜராத் காவல் துறைக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை.

  • விளையாட்டு வீரர்களின் உடல் தகுதியை வைத்து விமர்சிப்பது வெட்கக்கேடான ஒன்று என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரின் கருத்துக்கு மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடும் விமர்சனம்.

  • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸிற்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை. கடுமையான மூச்சுத்திணறல் பிரச்சினை ஏற்பட்டதால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை அறிக்கை.

  • மெக்சிகோ, கனடாவுக்கு இன்று முதல் வரி விதிப்பு. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.

  • விறுவிறுப்பை எட்டியுள்ள சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர். முதல் அரையிறுதியில் இந்தியா - ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை.

  • 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - சுந்தர் சி கூட்டணி. கேங்கர்ஸ் படம் ஏப்ரல் 24 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com