மாதவிடாய் கால வலியை இயற்கையான முறையில் குறைக்க, அன்னாசிப்பழமும் லவங்கப் பட்டையும் சிறந்த தீர்வாக அமையும் என்று ஊட்டச்சத்து நிபுணர் குஷி சாப்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஆங்கில நாளிதழில் கூறுகையில், அன்னாசிப்பழத்தில் புரோமெலைன் என்ற நொதி உள்ளது. இது கருப்பை தசைகளைத் தளர்த்தி, வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம். லவங்கப் பட்டையில் உள்ள சின்னமால்டிஹைட் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, மாதவிடாய் கால அசௌகரியத்தைக் குறைக்கிறது எனவும் தெரிவித்திருக்கிறார்.
மேலும், புதிதாக நறுக்கிய அன்னாசிப்பழத் துண்டுகளின் மேல் சிறிது லவங்கப் பட்டைத் தூளைத் தூவி உட்கொள்ளலாம். இது ஒரு இயற்கை வைத்தியம் என்றாலும், கடுமையான வலி இருப்பவர்கள் மற்றும் ரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளை உட்கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம் என்கிறார் குஷி சாப்ரா. இந்த எளிய வீட்டு வைத்தியம் மாதவிடாய் காலத்தை வலியின்றிக் கடக்க உதவும் என்று நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.