நோரோ வைரஸ் முகநூல்
ஹெல்த்

அமெரிக்கா|அதிகரித்து வரும் நோராவின் தாக்கம்...பார்க்கலாம்!

அமெரிக்காவில் நோரோ வைரஸின் பாதிப்பு அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

அமெரிக்காவில் உணவு மூலம் பரவும் நோய்களில் முதலிடத்தில் உள்ளது நோரோ வைரஸ். அமெரிக்காவின் நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் அறிக்கையின் படி, 2021 - 2024 இடையில் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளன. நவம்பர் மாத இறுதியில் 69 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், டிசம்பர் முதல் வாரத்தில் 91 வழக்குகள் பதிவாகியுள்ளது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் மட்டும் 19- 21 மில்லியன் வழக்குகள் பதிவாகி உள்ளது.

நோரோ வைரஸ்:

இதனை வயிற்றுக்காய்ச்சல் என்று பொதுவாக அழைப்பர்.

விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் என்று கூறப்படும் இந்த வகை வைரஸ் மிகவும் தீவிரமாக பரவும் தன்மைகொண்டது. இதற்கான மருந்து இன்னும் கண்டறியப்படவில்லை.

அறிகுறிகள்

நோரோ வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள்

குமட்டல்
வாந்தி
வயிற்று வலி அல்லது பிடிப்புகள்
வயிற்றுப்போக்கு
உடல் வலி
அதிக வெப்பநிலை
தசை வலியும்

நோரோ வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இந்த அறிகுறிகள் 12 - 48 மணி நேரத்திற்கு பிறகுதான் ஒவ்வொன்றாக தென்பட ஆரம்பிக்கிறது.

மேலும், இந்த அறிகுறிகள் மோசமாகும் போது நீரிழப்பு ஏற்படலாம்.

நோரோ வைரஸ் 1 முதல் 3 நாட்கள் வரை நீடிக்கும். பெரும்பாலான மக்கள் சிகிச்சையின்றி முழுமையாக குணமடைகின்றனர்., பாதிக்கப்படும் வயதானவர்கள் இறப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது

எப்படி தடுக்க முடியும்?

  • இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் நேரடியாகத்தொடர்பு கொள்வதன் முலம் வேகமாக பரவுவதால், கைகளை தவறாமல் கழுவுவதன் மூலமாகவும், அசுத்தமான பரப்புகளை கிருமி நிக்கம் செய்வதன் மூலமாகவும் தடுக்கலாம்.

  • அசுத்தமான தண்ணீரை குடிக்க கூடாது.

  • தண்ணீரை கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும்.

  • பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதற்கு முன்பு நன்றாக ஓடும் நீரில் கழுவி எடுக்கவும்.

  • கடல் உணவை நன்றாக சுத்தம் செய்து சமைக்க வேண்டும்.