வாக்கிங் நிமோனியா
வாக்கிங் நிமோனியாமுகநூல்

தமிழ்நாட்டில் அதிகமாக பரவி வரும் ‘வாக்கிங் நிமோனியா’!

தமிழ்நாட்டில் ‘வாக்கிங் நிமோனியா’ அதிகமாக பரவி வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். அதென்ன வாக்கிங் நிமோனியா, அதனை தடுப்பது எப்படி பார்க்கலாம்.
Published on

வாக்கிங் நிமோனியா என்பது தீவிரத் தன்மை குறைந்த நிமோனியா ஆகும். சளி, இருமல், தொண்டை வலி, காய்ச்சல், உடற்சோர்வு ஆகியவை இதன் அறிகுறிகளாகும். பொதுவாக, வாக்கிங் நிமோனியா பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய தேவை இருக்காது.

வாக்கிங் நிமோனியா
2024-ல் மருத்துவத்துறை | ஹீட் ஸ்ட்ரோக் To ஆய்வகத்தில் காணாமல்போன Samples.. பேசுபொருளான 5 சம்பவங்கள்!

ஆனால், தற்போது வாக்கிங் நிமோனியா பாதிக்கப்பட்டவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கும் அளவுக்கு அதன் தாக்கம் தீவிரமடைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். வாக்கிங் நிமோனியா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆன்டிபயாடிக் மருந்தே போதுமானதாக இருந்தது. ஆனால், இப்போது இந்நோயால் பாதிக்கப்பட்ட பலருக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் பெரிய அளவில் தருவதில்லை என்றும் இதனால், நோயின் தீவிரம் அதிகரித்து ஐசியூ வார்டில் சேர்க்கும் சூழல் ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குளிர்காலம் காரணமாக தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், சளியால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் நிரம்பிக் காணப்படுகிறது. இதனிடையே வாக்கிங் நிமோனியாவும் பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக 5 வயது 17 வயதுக்குட்பட்டவர்களுக்கு வாக்கிங் நிமோனியா பாதிப்பு அதிகம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com