உலகளவில் நிம்பஸ் வகை கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சீனா மற்றும் அமெரிக்காவில், இந்த வகை கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.
ஏற்கனவே உலக சுகாதார நிறுவனம், இந்த நிம்பஸ் வகை கொரோனாவை, கண்காணிக்கப்பட்டு வரும் கொரோனா வகையாக வகைப்படுத்தியுள்ளது. இந்த வகை கொரோனாவால் கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது என்பதற்கு, தரவுகள் இல்லை எனவும் கூறியுள்ளது.
நிம்பஸ் வகை கொரோனாவிற்கு, மற்றவகை கொரோனா பாதிப்புகளால் ஏற்படும் அறிகுறிகளே ஏற்படுகின்றன.
அதேவேளையில், இதனால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர், உணவு அல்லது உமிழ்நீரை விழுங்கும்போது ரேஸர் பிளேடை விழுங்குவது போல் வலிப்பதாக கூறியுள்ளனர். இந்தியாவை பொருத்தவரை நிம்பஸ் கொரோனா பரவல் என்பது, 2020 மற்றும் 21-இல் ஏற்பட்டது போல், அலையாக பரவாது என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். இருப்பினும், கைகளைக் கழுவுதல், முகக்கவசம் அணிதல் போன்ற வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.