காலையில் நேரத்தில் எழுவதுபுதிய தலைமுறை
ஹெல்த்
காலையில் குறித்த நேரத்தில் எழுவது எப்படி?
குறித்த நேரத்தில் எழ வேண்டும் என்றால், முந்தைய நாள் இரவில் சரியான நேரத்துக்குத் தூங்கச் செல்வது முக்கியம்.
“காலையில் குறித்த நேரத்தில் எழுவதால், நம் உடல் கடிகாரத்தின் இயக்கம் சீராவதுடன், ஆரோக்கிய வாழ்வுக்கும் உதவும்” என்கிறார்கள் மருத்துவர்கள்.
குறித்த நேரத்தில் எழ வேண்டும் என்றால், முந்தைய நாள் இரவில் சரியான நேரத்துக்குத் தூங்கச் செல்வது முக்கியம். விழித்தவுடன் படுக்கையில் இருந்து எழுவதும், சூரிய வெளிச்சத்துக்கு முகம் கொடுப்பதும் 'கார்டிசோல்' எனும் ஹார்மோன் உற்பத்திக்கு உதவி, நமக்கு சுறுசுறுப்பையும் விழிப்புணர்வையும் தரும் என்கிறார்கள் நிபுணர்கள். விடுமுறை நாள்களிலும் வழக்கமான நேரத்தில் எழுந்துவிட வேண்டும் என்றும், தேவையெனில் அன்று மட்டும் பகலில் ஒரு குட்டித்தூக்கம் போட்டுக்கொள்ளலாம் என்றும் சொல்கிறார்கள் நிபுணர்கள்.