அதீத வெப்பம் pt web
ஹெல்த்

அதீத வெப்பம் | ஆண்டுதோறும் 7 லட்சம் மரணங்கள் நிகழும் அபாயம்.. லான்செட் ஆய்வு எச்சரிக்கை!

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அதீத வெப்பம், மனிதர்களின் உடல் உழைப்பைக் குறைத்து, உலகளவில் பெரும் சுகாதாரப் பேரழிவை ஏற்படுத்தும் என்று புதிய ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது.

PT WEB

லான்செட் இதழில் வெளியாகியுள்ள ஆய்வின்படி, வரும் இரண்டாயிரத்து 50ஆம் ஆண்டுக்குள் அதிகரித்துவரும் வெப்பம் காரணமாக, ஆண்டுதோறும் சுமார் 7 லட்சம் பேர் அகால மரணத்தைச் சந்திக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உலகப் பொருளாதாரத்தில் சுமார் 368 கோடி டாலர் உற்பத்தி இழப்பு ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வெப்பம் அதிகரிக்கும்போது மக்கள் உடற்பயிற்சி செய்வதையும், நடப்பதையும் தவிர்ப்பார்கள். இதனால், 2030ஆம் ஆண்டுக்குள் உடல் உழைப்பின்மையை 15 சதவீதம் குறைக்க வேண்டும் என்ற உலக சுகாதார அமைப்பின் இலக்கு எட்டப்படாமல் போகும் அபாயம் உள்ளது.

உடற்பயிற்சி

இந்தியாவைப் பொறுத்தவரை, 2050ஆம் ஆண்டில் போதிய உடல் உழைப்பு இல்லாத காரணத்தால், ஒரு லட்சம் மக்கள்தொகையில் சராசரியாக 10க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கும் நிலை ஏற்படலாம். வெப்ப மண்டல நாடுகளில், சராசரி வெப்பநிலை 27.8 டிகிரி செல்சியஸைத் தாண்டும். ஒவ்வொரு மாதமும், உடல் உழைப்பின்மை 1.85 சதவீதம் அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனைத் தடுக்க, உடற்பயிற்சி வழிகாட்டுதல்களில் வெப்ப அபாய எச்சரிக்கைகளைச் சேர்க்கவும், நிழல் நிறைந்த நடைபாதைகளை உருவாக்கவும், வெப்பப் பாதுகாப்புத் தரநிலைகளை வலுப்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உடல் உழைப்பின்மையை ஒரு தனிப்பட்ட விருப்பமாகப் பார்க்காமல், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ஒரு முக்கிய சுகாதாரப் பிரச்சினையாகக் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.