pomegranate health benefits
pomegranate web

ஆயுள், ஆரோக்கியம், எதிர்ப்புச் சக்தி.. ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கும் மாதுளை!

மாதுளை உடல் செல்களைப் பாதுகாத்து ஆயுளை நீட்டிக்கும். மாதுளையின் தோல், சாறு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இதயத்தின் ரத்தநாளங்களில் கொழுப்புப் படிவதைத் தடுக்கிறது.
Published on
Summary

மாதுளைப் பழம் உடல்நலனுக்கு மிகுந்த பயனுள்ளதாக உள்ளது. இதன் தோல் மற்றும் சாறு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், புற்றுநோய் செல்களை எதிர்க்கும் சக்தி வாய்ந்த ஆண்டிஆக்சிடென்ட்டுகளை கொண்டுள்ளது. மாதுளையில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தைத் தூண்டி, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

எளிதாக கடைகளில் கிடைக்கும் மாதுளை, ஒவ்வாமையை குறைக்கும். மாதுளை உடல் செல்களை பாதுகாத்து ஆயுளை நீட்டிக்கும். மாதுளையின் தோல், சாறு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இதயத்தின் ரத்தநாளங்களில் கொழுப்புப் படிவதைத் தடுக்கிறது. மாதுளையில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தைத் தூண்டுகிறது.

pomegranate
pomegranate web

நடுத்தர வயதில் இருக்கும் பெண்கள் மாதுளைப் பழத்தை உண்பது உடல்நலனுக்கு ஏற்றது என ஊட்டசத்து நிபுணர்கள் கூறுகின்றனர். சமைத்த உணவுகளைவிடவும், காய்கறிகள், பழங்களை நேரடியாக உண்பது உடல்நலனுக்கு ஏற்றதாகும். நம்மைக் கடந்துசெல்லும் பழவண்டியிலோ, புறநகர் மின்சார ரயில்களிலோ மாதுளை எளிதாக கிடைக்கும் பழங்களில் ஒன்றாக இருக்கிறது.

மாதுளை, ஹார்மோன் நடுநிலை தன்மையை பேணுவது மட்டுமின்றி, ஒவ்வாமையை குறைக்கிறது. ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து உடல் செல்களை பாதுகாப்பதுடன் ஆயுளை நீடிக்கும் உடல் கூறுகளை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மாதுளையின் தோல் மற்றும் அதன் சாறில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், புற்றுநோய் செல் வளர்ச்சியை எதிர்த்துப் போராடவும் உதவும் மிகவும் சக்திவாய்ந்த ஆண்டிஆக்சிடென்ட்டான பாலிஃபீனால் கலவைகள் உள்ளன.

pomegranate
pomegranate web

மாதுளையை பழரசமாக குடிக்கும்போது ரத்த ஓட்டம் சீராகிறது. இதயத்தின் உயர் அழுத்த ரத்தநாளங்களில் கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது. வைட்டமின் சி, கே, பொட்டாசியம், நார்ச்சத்து ஆகியவை மாதுளையில் உள்ளன. காலை நேரத்தில் ஒரு கிண்ணம் நிறைய மாதுளை முத்துக்களை உண்ணும்போது அதில் உள்ள நார்சத்து செரிமானத்தைத் தூண்டுவதுடன் குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com