mobile using addiction web
ஹெல்த்

மொபைல் பயன்பாட்டால் அதிகரிக்கும் டோப்பமைன்.. அடிக்சனிலிருந்து மீள என்ன செய்யவேண்டும்..?

நம் பதற்றத்துக்கு டோப்பமைனே காரணம் என்றும் நிம்மதி வேண்டுமானால் ஆக்ஸிடாஸினை சுரக்க வையுங்கள் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

PT WEB

கைபேசி பயன்பாட்டால் டோப்பமைன் அதிகரித்து, நம் உடலில் பதற்றம் மற்றும் நிம்மதியின்மை ஏற்படுகிறது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதனால், குடும்பத்தினரோடு நேரம் செலவிட முடியாமல், நம் மனநிலை பாதிக்கப்படுகிறது. ஆக்ஸிடாஸினை சுரக்க வைப்பதன் மூலம், நிம்மதியான, மகிழ்ச்சியான மூளையைப் பெற முடியும்.

நாம் இருப்பது கைபேசியின் உலகம். கைபேசியை அதிகம் பயன்படுத்துவதால் நம் உடலில் டோப்பமைன் அதிகமாகச் சுரக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். டோப்பமைன் என்பது நம் மூளையிலும் உடலிலும் சுரக்கும் ஒரு வேதிப்பொருள். இது நம் உடலில் ஆக்ஸிடாஸினைக் குறைத்து பதற்ற நோய்க்கு இட்டுச்செல்கிறது. ஆரம்ப காலத்தில் மனிதர்களுக்கு டோப்பமைன் ஒரு நாளில் சில தடவைதான் சுரந்திருக்கிறது, தற்காலத்திலோ எப்போதெல்லாம் கைபேசி பார்க்கிறோமோ அப்போதெல்லாம் டோப்பமைன் அதிகரிக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள்.

using mobile

இதனால் நம் உடல் அதீதமாக டோப்பமைனுக்கு அடிமையாகிறது. ஆகவே, சிறிதளவு சலிப்பான தருணத்தைக்கூட தாங்க முடியாதவர்களாக நாம் ஆகிறோம் என்கிறார்கள் நிபுணர்கள். இதனால் அன்றாட வாழ்வோடு தொடர்பு ஏற்படுத்த முடியாதவர்களாக நாம் ஆகிறோம்.

குடும்பத்தினரோடு செலவிட வேண்டிய நேரத்தில் கைபேசியைப் பார்த்துக்கொண்டு இருப்பதால் ஒவ்வொரு முறையும் டோப்பமைன் அதிகரித்து ஆக்ஸிடாஸினைக் குறைக்கிறது. ஆக்ஸிடாஸின் குறைவதால் நாம் பதற்றத்துக்கும் அச்சத்துக்கும் நிம்மதியின்மைக்கும் ஆளாகிறோம் என்கிறார்கள் நிபுணர்கள்.

family

அமைதியான, மகிழ்ச்சியான மூளையைப் பெறுவதற்கு நாம் ஆக்ஸிடாஸினுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இதற்கு நம் இணையருடனான உடல்ரீதியான தொடுதல், குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுதல், நல்ல விஷயங்களைப் பாராட்டுதல் போன்ற விஷயங்களைச் செய்ய வேண்டும். இப்படியெல்லாம் செய்வதன் மூலம் டோப்பமைன் பாலைவனத்திலிருந்து விடுபட்டு ஆக்ஸிடாஸின் சோலைவனத்துக்குத் திரும்ப முடியும் என்கிறார்கள் நிபுணர்கள்.