Radio Taiso web
ஹெல்த்

ஜப்பானின் ஆரோக்கிய ரகசியம்.. பாரம்பரிய 'ரேடியோ டைசோ' பயிற்சி.. 10 நிமிடம் போதும்.!

ஜப்பானின் ஆரோக்கிய ரகசியம் 100 ஆண்டு 'ரேடியோ டைசோ' வை செய்ய தினமும் 10 நிமிடம் போதும் என்று கூறப்படுகிறது.

PT WEB

பூமியில் மிக நீண்ட காலம் வாழும் மக்கள்தொகையைக் கொண்ட நாடுகளில் ஜப்பானும் ஒன்றாகும். "ரேடியோ டைசோ" உடற்பயிற்சிப் பாரம்பரியம், உடல் மற்றும் மன நலனை மேம்படுத்த உதவுகிறது.

ஜப்பான் மக்களின் நீண்ட ஆயுளின் ரகசியமாகப் பார்க்கப்படும் 'ரேடியோ டைசோ' (Radio Taiso) உடற்பயிற்சி, நூறு ஆண்டுகளை எட்டியும் இன்றும் அந்நாட்டில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தினமும் காலை 6:30 மணிக்கு வானொலியில் ஒலிபரப்பாகும் பியானோ இசைக்கேற்ப, பூங்காக்கள், பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் லட்சக்கணக்கானோர் 10 நிமிட எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். இதனை 2 கோடி ஜப்பான் மக்கள் செய்கின்றனர் .

1928 இல் தொடங்கப்பட்ட இந்த வழக்கம், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், முதியவர்களிடையே சமூகத் தொடர்பை வலுப்படுத்தவும் உதவுகிறது. எந்த உபகரணமும் இன்றி, அனைத்து வயதினரும் செய்யக்கூடிய இந்த எளிய பயிற்சிகளே ஜப்பானில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.