Physiotherapy FB
ஹெல்த்

பிசியோதெரபி|நீண்டநாளாக உள்ள எலும்பு-மூட்டுச் சிதைவை தடுக்கலாம்.. எப்படி? விளக்குகிறார் மருத்துவர்!

எலும்பு சிதைவுக்கான அடிப்படைக் காரணங்கள் பெரும்பாலும் வாழ்க்கை முறை மற்றும் உடலியல் காரணிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதனால் அவற்றை மாற்றியமைத்தாலே எலும்பு தேய்மானத்தை முழுமையாக சரிச்செய்ய முடியும் என்கிறார் மருத்துவர்.

Vaijayanthi S

எலும்பு மற்றும் மூட்டு சிதைவு என்பது எலும்புகள் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் தேய்மானம் ஆகும். இதில் உடலில் உள்ள எலும்புகள் மற்றும் குருத்தெலும்புகள் காலப்போக்கில் தேய்ந்து முற்றிலுமாக சிதைந்து விடும். இதனால் வலி, விறைப்பு மற்றும் உடலின் இயக்கம் குறைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். அதிகமாக வேலைபார்ப்பது அல்லது குறைவாக வேலைப்பார்ப்பதினால் இந்த தேய்மான ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த மூட்டுச் சிதைவைப் பொறுத்தவரை, தேய்மானத்தால் ஏற்படும் ஆரம்பகால மூட்டுவலி பொதுவாக இடுப்பு மற்றும் முழங்கால்கள் போன்ற எடை தாங்கும் மூட்டுகளில் காணப்படுகிறது. குறிப்பாக நீரிழிவு போன்ற இணை நோய்கள் உள்ள நபர்களுக்கு இது அதிகமாக ஏற்படும். குறிப்பாக விளையாட்டு வீரர்களில், முன்கூட்டிய மூட்டுச் சிதைவுக்கு வழிவகுக்கும்," என்று மும்பையில் உள்ள கே.ஜே. சோமையா பிசியோதெரபி கல்லூரியின் தசைக்கூட்டு பிசியோதெரபி துறையின் இணைப் பேராசிரியர் டாக்டர் ஹினா ஜெயின் கூறுகிறார்.

எலும்பு சிதைவுக்கான அடிப்படைக் காரணங்கள்

எலும்பு சிதைவு பெரும்பாலும் வாழ்க்கை முறை மற்றும் உடலியல் காரணிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. உட்கார்ந்த பழக்கவழக்கங்கள், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது, மோசமான உணவுத் தேர்வுகள், போதுமான சூரிய ஒளி இல்லாதது, நல்ல உடற்பயிற்சி இல்லாமை மற்றும் ஆரம்பகால மாதவிடாய் நிறுத்தம் போன்ற ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுவதாக மருத்துவர் கூறுகிறார்.

எலும்பு மற்றும் மூட்டு சிதைவுக்கான அறிகுறிகள்

மூட்டு வலி, மூட்டுகளில் விறைப்பு, இயக்கம் குறைதல், வீக்கம், எலும்புகள் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் சத்தம் ஆகியவை மூட்டுச் சிதைவின் அறிகுறிகள் ஆகும். இப்போது 30 வயதிலேயே இந்த தேய்மானம் தோன்றத் தொடங்கியுள்ளன. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மருந்தியல் அல்லாத தலையீடுகள் அதிக பொருத்தத்தைப் பெறுகின்றன, அதாவது அதிகமான நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்தல் உணவு பழக்கவழக்கங்களை மாற்றி அமைத்தல் ஆகிவை தேய்மானத்தை கட்டுப்படுத்தும் என்கிறார் மருத்துவர்.

joint

சிகிச்சையின் பங்கு

எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சிகிச்சை குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது. வலிமை பயிற்சி, எடை தாங்கும் பயிற்சிகள் மற்றும் வழிகாட்டப்பட்ட வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை மாற்றங்கள், பிசியோதெரபி செய்வது போன்றவை அனைத்தும் நேர்மறையாக செயல்பட்டு விரைவில் குணமடை வழி செய்யும் என்று மருத்துவர் கூறுகிறார்.

உடற்பயிற்சி நெறிமுறைகள்

1. நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்ட சரியான உடற்பயிற்சியை செய்தல் நல்லது.

2. உடற்பயிற்சி மற்றும் துணை சிகிச்சைகள் மூலம் வலியை கட்டுப்படுத்த முடியும்.

3. பிசியோதெரபி செய்தல் நல்லது. பிசியோதெரபி என்பது வழிகாட்டும் உடற்பயிற்சியுடன் மட்டும் நின்றுவிடவில்லை. இது வலி மற்றும் தேய்மானத்தை தடுத்து மறுவாழ்வுக்கு வழிவகுக்கும் என்கிறார் மருத்துவர்.

4. மேலும் எலும்பு மற்றும் மூட்டு தேய்மானம் அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே பிசியோதெரபி செய்ய தொடங்கிவிட்டால் எலும்பு சிதைவதை தாமதப்படுத்தக்லாம் அல்லது தடுக்கலாம் என்கிறார் மருத்துவர்.

5. எலும்பு சிதைவு ஏற்கனவே ஏற்பட்டுள்ள சந்தர்ப்பங்களில், உடல் சிகிச்சை அறிகுறிகளை சரியாக செய்வதினால் உடல் செயல்பாடு மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும்.

6. எலும்பு மற்றும் மூட்டு சிதைவு ஏற்பட்டால் பிசியோதெரபி செய்வதுதான் முக்கியம் என்று மருத்துவர் கூறுகிறார். ஆரம்பகால மூட்டுப் பிரச்சினைகள் அதிகரித்து வரும்போது, அதனை தடுக்க மற்றூம் சரிச் செய்ய பிசியோதெரபி ஒரு மூலக்கல்லாக இருக்கிறது.

7. மேலும் இந்த பிசியோதெரபி பயிற்சிகள் செய்யும் போது அவை எலும்புகள் மற்றும் மூட்டுகள் இயக்கத்துடன்தான் தொடங்குகிறது. அதனால் விரைவில் இந்த எலும்பு மற்றும் மூட்டு தேய்மானத்தை கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவர் கூறுகிறார்.