ஜிலேபி, சர்பத், மிட்டாய், க்ரில் சிக்கன் உட்பட உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் நிறமிகளால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாகவும், இத்தகைய ஆபத்தான நிறமிகளை அரசு உடனடியாக தடைசெய்ய வேண்டும் என்றும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் அமெரிக்காவில், உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் 8 நிறமிகள் தடைசெய்யப்பட்டன. இந்நிலையில், இந்தியாவிலும் இத்தகைய குரல்கள் வலுவாக எழுத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, சிவப்பு 3, சிவப்பு 40, மஞ்சள் 5 ஆகிய வகை நிறமிகளை உடனடியாக தடைசெய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.