சாலைகளில் வாகனங்கள் அதிவேகமாக செல்லும் போது உராயும் டயர்களில் இருந்து மிக நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் வெளிப்படுவதாகவும் இவை உடலுக்குள் செல்லும்போது நுரையீரல் மற்றும் குடல் புற்றுநோயை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இவை தவிர மலட்டுத்தன்மை உள்ளிட்ட பிரச்சினைகளையும் மைக்ரோபிளாஸ்டிக்குகள் ஏற்படுத்துவதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடலில் உள்ள மூளை, சிறுநீரகம், இதயம், நுரையீரல் என அனைத்து அங்கங்களிலும் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் படிந்திருக்கும் அதிர்ச்சித்தகவல் தங்கள் ஆய்வில் தெரியவந்ததாக சான் ஃப்ரான்சிஸ்கோவில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 460 மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பொருட்கள் உலகளவில் உற்பத்திய செய்யப்படுவதாகவும் இது இன்னும் 25 ஆண்டுகளில் இரட்டிப்பாகும் என்றும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் கூறியுள்ளது.
சாலைகள் உள்ளிட்ட வெளியிடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிவதால் இந்த அபாயங்களை கணிசமாக குறைக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் மறுசுழற்சி, ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்குகளை ஒழிப்பது, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற வழிகளில் மருத்துவ அபாயங்களை தவிர்க்கலாம் என்றும் அந்த ஆய்வு கூறியுள்ளது.