இந்தியர்களின் மாரடைப்பு அபாயத்தைக் கண்டறிவறிவதற்கு இந்தியர்களுக்கெனத் தனித்துவமான மருத்துவக் கணக்கீட்டு முறைகள் தேவை என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
மேற்கத்திய மருத்துவ கணக்கீட்டு முறைகள் இந்தியர்களின் மாரடைப்பு அபாயத்தைக் கண்டறிவதில் தோல்வியடைவதாக டெல்லி ஜி.பி.பந்த் மருத்துவமனை ஆய்வு கூறுகிறது. 5,000 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், முதன்முறை மாரடைப்பு ஏற்பட்டவர்களில் 80 சதவீதத்தினர் முன்னதாக 'குறைந்த அபாயம்' கொண்டவர்களாகவே வகைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்தியர்களுக்குச் சராசரியாக 54 வயதிலேயே மாரடைப்பு ஏற்படுகிறது. உடல் எடை சரியாக இருந்தாலும், வயிற்றுப் பகுதி கொழுப்பு மற்றும் இன்சுலின் எதிர்ப்புத் திறன் போன்ற காரணங்களால் இந்தியர்களுக்குப் பாதிப்பு அதிகம். ஆனால், மேற்கத்திய மருத்துவ கணக்கீட்டு முறைகள் இந்த தனித்துவ உடல் அமைப்பை தவற விடுவதாக ஜி.பி. பந்த் மருத்துவமனை ஆய்வு கூறுகிறது. எனவே, இந்தியர்களுக்கெனத் தனித்துவமான மருத்துவக் கணக்கீட்டு முறைகள் தேவை என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.