Heart Health Depends on Both Sleep Duration and Quality
இதய நோய்pt web

இதய ஆரோக்கியத்துக்கு ஆழ்ந்த தூக்கம் அவசியம்.. நிபுணர்கள் கூறுவது என்ன?

இதய ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எவ்வளவு நேரம் தூங்குகின்றோம் என்ற அளவும் ஆழ்ந்த தூக்கம் ஆகிய இரண்டுமே முக்கியம் என இதய நல நிபுணர்கள் கூறுகின்றனர்.
Published on
Summary

தூக்கக்குறைபாடு இதயத்துடிப்பை அதிகரித்து மாரடைப்பு அபாயத்தை 20% அதிகரிக்கிறது. தினசரி குறிப்பிட்ட நேரத்தில் உறங்கச் செல்வது, மொபைல் போன்களை தவிர்ப்பது, மற்றும் இரவில் காபி தவிர்ப்பது ஆழ்ந்த தூக்கத்தை உறுதி செய்ய உதவும்.

உடல் பருமன் ஆபத்து, இதயநோய் ஆபத்து ஆகியவற்றை குறைப்பதில் முறையான தூக்கம் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் 8 மணிநேரம் படுக்கையில் இருந்தாலும், அடிக்கடி விழிப்பு ஏற்பட்டால் உங்கள் இதயத்துக்கு தேவையான ஓய்வு கிடைக்காது. நாம் ஆழ்ந்து உறங்கும் போதுதான் நம் ரத்த அழுத்தம் சீராகிறது. தூக்கம் குறைந்தால் இதயத் துடிப்பு அதிகரித்து, மாரடைப்பு ஏற்படும் அபாயம் 20 சதவீதம் கூடுகிறது. ஆழ்ந்த தூக்கத்துடன் 8 மணி நேரம் வரை தூங்குவதற்கு தினமும் குறிப்பிட்ட நேரத்தில் உறங்கச் செல்வதை உறுதி செய்ய வேண்டும்.

Sleep
உறக்கம் Pt web

தினமும் காலை அல்லது மாலையில் நடைபயிற்சி மேற்கொள்வது, உறங்கும் முன்பு தியானம் மேற்கொள்வது, புத்தகங்கள் படிப்பது ஆகியவை ஆழ்ந்த தூக்கத்தை உருவாக்கும். முக்கியமாக தூங்குவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பு மொபைல் போன்களை தவிர்க்க வேண்டும். வயிறு முட்ட இரவு உணவு உண்ணாமல், வயிறு சிறிது காலியாக இருக்கும் அளவுக்கு இரவு உணவு உண்ண வேண்டியது அவசியம். இரவில் காபி குடிப்பதை தவிர்க்கவும். உங்களுக்கு தூக்கக்குறைபாடு இருந்தால் உரிய மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாம்.

Heart Health Depends on Both Sleep Duration and Quality
தூக்கம் ஏன் அவசியம்? எச்சரிக்கும் நிபுணர்கள்! பலன்கள் என்னென்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com