கடந்த 2019 ஆம் ஆண்டு பரவிய கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவியது. லட்சக்கணக்கான மக்கள் மருத்துவமனைகளில் கூட்டம் கூட்டமாக குவிய ஆரம்பித்தனர். ஏராளாமான இழப்புகள், பொருளாதார இழப்புகள் என உலகமே ஒரு ஆட்டம் கண்டது. மருத்துவமனைகளில் போதுமான ஆக்ஸிஜன் சப்ளை இல்லாமல் பலர் அவதியடைந்தனர்.
இப்படி பலப்போராட்டத்திற்கு பிறகு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டநிலையில், நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதனால் தொற்று பாதிப்பும் , உயிரிழப்புகளும் குறைந்து கொண்டே வந்தது.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்த், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியது. ஆசிய நாடுகளில் ஒரே வாரத்தில் 14 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டனர்.இதனை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி நாட்டில் கொரோனா பாதிப்பு 5000 ஐ கடந்துவிட்டது. 5364 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் ஒரே நாளில் 498 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் 2 பேர், கர்நாடகா, பஞ்சாப்பில் தலா ஒருவர் என மொத்தம் 4 பேர் நேற்று உயிரிழப்பு என்று தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் தொற்று பாதித்தவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. கேரள மாநிலத்தில் மட்டும் நேற்று 192 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று 271 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் மாநிலம் முழுவதும் 1684 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் 107 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் 60 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 597 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், கர்நாடாக மாநிலத்தில் 451 பேரும், மேற்கு வங்கத்தில் 596 ஆக இருந்த நிலையில் இன்று 218 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் நேற்று வரை 221 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் 330 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.