சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி.. இதை மட்டும் பண்ணுங்க!
சிட்ரஸ் வகை பழங்கள் சரியான மருந்து..
சிட்ரஸ் வகை பழங்கள் இதயம், கல்லீரலை காக்க உதவுவதாக பிரேசில் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிக உடல் பருமன் கொண்டவர்கள் ஆரஞ்சு, எலுமிச்சை, கமலா பழம், சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் வகை பழங்களை அதிகமாக சாப்பிட்டால், இதய நோய்கள், கல்லீரல் மற்றும் நீரிழிவு பாதிப்புகள் தடுக்கப்படுவதாக பிரேசில் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது.
அவற்றில் உள்ள வைட்டமின், ஆன்டிஆக்சிடன்ட் சத்துகள், நோய் ஏற்படுவதை தடுத்து ஆரோக்கியத்தை பேணி காப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தினம் 20 பாதம்.. ரத்த சர்க்கரை குறையும்..
தினமும் பாதாம் சாப்பிடுவது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் என அமெரிக்க நிபுணர்கள் வெளியிட்ட ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Current Developments in Nutrition என்ற பெயரில் வெளியாகியுள்ள ஆய்வறிக்கையில், பாதாம் சாப்பிடுவது ரத்த அழுத்தத்தை குறைக்கும் எனவும் கொலஸ்ட்ரால் அளவுகளை சீராக்க உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், பாதாம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, 12 வாரங்களுக்கு தினமும் 60 கிராம் பாதாம் சாப்பிட்டவர்களுக்கு இடுப்பு சுற்றளவு குறைந்ததாகவும், உயரத்தையும் உடல் எடையையும் வைத்து கணக்கிடப்படும் `உடல் நிறை குறியீடு' சீரடைந்ததாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், பாதாமில் கலோரிகள் அதிகம் இருப்பதால் பாதாம் உண்பதில் கட்டுப்பாடு முக்கியம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சம் 15 முதல் 20 பாதாம்களையே ஒரு நாளில் எடுத்துக்கொள்ள வேண்டும் என ஆய்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது