வாசிப்பு பழக்கம்  முகநூல்
ஹெல்த்

உங்களுக்கு வாசிப்பு பழக்கம் அதிகமாக இருக்கிறதா? அப்போ இந்த பலன் இருக்கும்! ஆராய்ச்சி சொல்வது என்ன?

வாசிப்பு பழக்கம் உள்ள இளையோரின் மூளை சிறப்பாக செயல்படுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

PT WEB

வாசிப்பு பழக்கம் உள்ள இளையோரின் மூளை சிறப்பாக செயல்படுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

மூளையின் செயல்படும் அமைப்பும் மாறுபடுவதாகக் கூறப்படுகிறது. The Reading Agency என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், வாசிப்போர் எண்ணிக்கை அண்மைக்காலங்களில் குறைந்து வருவதாக தெரியவந்துள்ளது. இருப்பினும், வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள் மற்றும், வாசிப்பு பழக்கம் இல்லாதவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வில், வாசிப்பு பழக்கம் உள்ளவர்களின் மூளை சிறப்பாக செயல்படுவதாக தெரியவந்தது.

மூளையின் கோர்டெக்ஸ் என்ற அமைப்பிலேயே மாற்றம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த அமைப்புதான் ஞாபகத் திறன், புரிந்துணர்வு உள்ளிட்டவைகளை சேகரித்து வைக்கும் பகுதி என்பதால், வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள் இந்த செயல்பாடுகளில் திறன் வாய்ந்தவர்களாக இருப்பதாக ஆய்வு மூலம் தெரியவருகிறது.