Representative x
ஹெல்த்

ஹெல்த் டிப்ஸ்| எப்படி சிறுநீர் கழித்தால் ஆண்களுக்கு நல்லது..? மருத்துவர்கள் ஆலோசனை.!

கழிவறைகளில் அமர்ந்துகொண்டு சிறுநீர் கழிப்பதால் ஆண்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இது குறித்துப் பார்க்கலாம்.

PT WEB

ஆண்கள் பொதுவாக நின்றபடி சிறுநீர் கழிக்கக் கூடிய பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர். ஆனால் அமர்ந்துகொண்டு சிறுநீர் கழிப்பதால் ஆண்களுக்கு பல நன்மைகள் கிடைப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அந்தவகையில் சிறுநீர் பாதை நோய் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு இப்பழக்கம் மிகவும் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது.

Representative

அமரும்போது இடுப்புத் தசைகள் முழுமையாகத் தளர்ந்து, சிறுநீர்க் குழாய் மீதான அழுத்தம் குறைவதால், சிறுநீரின் ஓட்டம் வேகமாகவும், சரியாகவும் இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் சிறுநீர் பாதை தொற்றுகள், சிறுநீர்ப்பை கற்கள் ஏற்படும் அபாயமும் குறைகிறது. அதேபோல், அமரும்போது சிறுநீர் தெறித்து கழிவறை இருக்கை, தரை ஆகியவற்றில் சிதறுவது கணிசமாகக் குறைவதால், கழிவறை சுத்தமாக பராமரிக்கப்படவும் உதவுகிறது. அன்றாடப் பணிகளுக்கு மத்தியில் அமர்ந்து சிறுநீர் கழிப்பது ஓரிரு நிமிடங்களுக்கு அமைதியை தரும் என்கின்றனர் மருத்துவர்கள்.