இ-சிகரெட் facebook
ஹெல்த்

பெல்ஜியம்: ‘இ-சிகரெட்’ - அடுத்த ஆண்டு முதல் தடை!

இ-சிகரெட் எனப்படும் மின் சுருட்டை அடுத்த ஆண்டு முதல் தடை செய்ய ஐரோப்பிய நாடான பெல்ஜியம் முடிவு செய்துள்ளது.

PT WEB

புகையிலை பயன்பாட்டால் உலகளவில் 8 மில்லியன் மக்கள் உயிரிழப்பதாக ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பெல்ஜியத்தில் பரவலாக கிடைக்கக்கூடிய மின் சுருட்டால் ஏராளமான குழந்தைகள் புகையிலை பயன்பாட்டிற்கு அடிமையாகுவதாகவும் ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து பெல்ஜியம் அரசுக்கு பெரும் தலைவலியாக இருக்கும் இ-சிகரெட் விற்பனைக்கு முடிவு கட்டும் நோக்கில் தடையை பெல்ஜியம் அரசு அறிவித்துள்ளது.

பெல்ஜியத்தை தொடர்ந்து ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் அரசுகள் இ-சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்க திட்டமிட்டு வருகின்றன. அதேநேரம் ஐரோப்பிய யூனியனின் அங்கம் இல்லாத பிரிட்டன், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இ-சிகரெட் விற்பனைக்கு தடையை அமல்படுத்த உள்ளது.