அர்ஜென்டினா முகநூல்
ஹெல்த்

அமெரிக்காவை தொடர்ந்து உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறிய அர்ஜென்டினா!

கோவிட் உள்ளிட்ட முக்கியமான விவகாரங்களை உலக சுகாதார அமைப்பு சரியாக கையாளவில்லை என அர்ஜென்டினா நாட்டின் அதிபர் ஜோவியர் மைலி சாடியுள்ளார்.

PT WEB

அமெரிக்காவைத் தொடர்ந்து உலக சுகாதார அமைப்பில் இருந்து அர்ஜென்டினாவும் வெளியேறியுள்ளது.

கோவிட் உள்ளிட்ட முக்கியமான விவகாரங்களை உலக சுகாதார அமைப்பு சரியாக கையாளவில்லை என அந்நாட்டின் அதிபர் ஜோவியர் மைலி சாடியுள்ளார். உலக சுகாதார அமைப்பு சுதந்திரமாக செயல்படவில்லை என்றும், மற்ற நாடுகளின் அரசியலுக்கு தலையாட்டும் பொம்மையாக செயல்படுகிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

முன்னதாக இதே குற்றச்சாட்டை முன்வைத்து அதிபர் ட்ரம்ப், உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்திருந்தார்.