இந்தியாவில் 25.4 கோடி (254 மில்லியன்) மக்கள் பொதுவான உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்தியாவில் உடல் பருமன் என்பது வெறும் உணவுப் பழக்கம் சார்ந்த பிரச்னை அல்ல என்றும் அதை நீண்டகால நோயாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தியாவில் உடல் பருமன் என்பது தனிநபர் சார்ந்த வாழ்க்கைமுறைப் பிரச்னை மட்டுமல்ல, அது ஒரு தீவிரமான தேசிய சுகாதார அவசரநிலை என்று மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன. 'கிளினிக்கல் ஒபிசிட்டி (Clinical Obesity)) இதழில் வெளியான ஆய்வறிக்கையின்படி, ஆய்வில் பங்கேற்றவர்களில் 84 விழுக்காட்டினர் உடல் எடையைக் குறைக்க முயல்வதாகச் சொல்லி உள்ளனர். ஆனால் அவர்களில் வெறும் 4.7 விழுக்காட்டினர் மட்டுமே தங்களது இலக்கை அடைந்து, ஓராண்டுக்கும் மேலாக எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க முடிகிறது. இது உடல் பருமன் என்பது மீண்டும் மீண்டும் வரக்கூடிய ஒரு சிக்கலான நோய் என்பதை உணர்த்துவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
தற்போதைய புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 25.4 கோடி பேர் பொதுவான உடல் பருமனுடனும், 35.1 கோடி பேர் வயிற்றுப்பகுதி பருமனுடனும் வாழ்கின்றனர். குறிப்பாக, குழந்தைகளிடையே இந்தப் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. 2019-ஆம் ஆண்டில் மட்டும் தொற்றாநோய்களால் ஏற்பட்ட 5.79 லட்சம் உயிரிப்புழகளுக்கு உடல் பருமன் தொடர்பான சிக்கல்களும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது .
புகழ்பெற்ற நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி.மோகன் உள்ளிட்ட வல்லுநர்கள், உடல் பருமனை வெறும் உணவுப் பழக்கம் சார்ந்த பிரச்னையாக சுருக்காமல் ஒரு நீண்டகால நோயாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். சத்தான உணவுகளுக்கு மானியம் வழங்குவது, உடற்பயிற்சிக் கூடங்களை அதிகரிப்பது மற்றும் பதப்படுத்தப்பட்ட (Ultra-processed) உணவுகள் மீதான கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்துவது மட்டுமே வருங்காலத் தலைமுறையை இந்த 'உடல் பருமன் வலையில்' இருந்து மீட்க உதவும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
“உடல் பருமன் உணவுப் பிரச்னை அல்ல என்றும் உடல் பருமன் மீண்டும் தாக்கும் நீண்டகால நோய் என்றும் ’கிளினிக்கல் ஒபிசிட்டி' இதழில் வெளியான ஆய்வில் தெரிய வந்துள்ளது . 'கிளினிக்கல் ஒபிசிட்டி’ இதழில் உடல் பருமன் குறித்த ஆய்வு முடிவுகள், ஆய்வில் பங்கேற்ற 84% பேர் உடல் எடையைக் குறைக்க முயல்கிறவர்கள் என்றும் 4.7% பேர் மட்டுமே நீடித்த உடல் எடைக் குறைப்பை அடைகிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது .