Model imga google gemeni
சிறப்புக் களம்

இந்தியாவில் இருந்து பெட்ரோல் இறக்குமதி செய்யும் ரஷ்யா.. என்ன காரணம்?

இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி 52.6% அதிகரித்த நிலையில், பெட்ரோலை இந்தியாவிடம் இருந்து ரஷ்யா இறக்குமதி செய்கிறது.

போத்திராஜ்

உலகிலேயே கச்சா எண்ணெய் உற்பத்தியில் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக இருக்கும் ரஷ்யா, பெட்ரோலை இந்தியாவிடம் இருந்து இறக்குமதி செய்கிறது என்ற தகவல் உண்மையில் வியப்புக்குரியது. ஏனென்றால், 2026-27ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ரஷ்யாவில் இருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி 52.6% அதிகரித்த நிலையில், பெட்ரோலை இந்தியாவிடம் இருந்து ரஷ்யா இறக்குமதி செய்கிறது.

என்ன காரணம்?

ரஷ்யாவின் எண்ணெய்க் கிடங்குகள், சுத்திகரிப்பு மையங்கள் மீது உக்ரைன் ட்ரோன்கள், நீண்ட தொலைவு செல்லும் ஏவுகணைகள் தொடர்ந்து குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றன. இதனால் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பின் உள்நாட்டு திறன் 40% குறைந்துவிட்டது. இதனால் தேசிய அளவில் எரிபொருள் சிக்கலை ரஷ்யா சந்திப்பதால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சிக்கலைத் தீர்க்க இந்தியாவிடம் இருந்து பெட்ரோலை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு ரஷ்யா தள்ளப்பட்டுள்ளது.

தேசிய அளவில் எரிபொருள் சிக்கலை ரஷ்யா சந்திப்பதால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சிக்கலைத் தீர்க்க இந்தியாவிடம் இருந்து பெட்ரோலை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு ரஷ்யா தள்ளப்பட்டுள்ளது.

எங்கிருந்து பெட்ரோல் ரஷ்யா செல்கிறது?

இந்தியாவின் நயாரா எனர்ஜி நிறுவனம், குஜராத்தின் வதிநார் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து கேமரூன் கப்பல் மூலம் 60 ஆயிரம் மெட்ரிக் டன் பெட்ரோலை முதல்கட்டமாக ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது. இந்த நயாரா நிறுவனத்தின் 49.13% பங்குகளை ரஷ்யாவின் அரசு எண்ணெய் நிறுவனமான ரோஸ்நெப்ட் வைத்திருக்கிறது, அதே அளவு பங்குகளை ரஷ்யாவின் முதலீட்டு நிறுவனமான யுசிபி (UCP) வைத்துள்ளது. இந்திய நிறுவனமாகச் சொல்லப்பட்டாலும் நயாராவின் 98% பங்குகள் ரஷ்யாவிடம்தான் உள்ளன. 2வது கட்டமாக 30ஆயிரம், 40ஆயிரம் மெட்ரிக் டன் பெட்ரோல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மத்திய அரசைப் பொறுத்தவரை, “ரஷ்யா அரசுக்கும், இந்திய அரசுக்கும் நேரடியாக எரிபொருள் விற்பனை இல்லை. எரிபொருள் இறக்குமதி, ஏற்றுமதி அனைத்தும், மூன்றாவது நபர்கள் மூலம்தான் நடக்கிறது” எனத் தெரிவித்தது.

இரு மடங்காகும் செலவு

இதில் முரணான விஷயம் என்னவென்றால், நயாராவின் குஜராத் சுத்திகரிப்பு நிலையத்தில் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெய் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அதிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலை மீண்டும் ரஷ்யா வாங்குகிறது. அதாவது, ரஷ்யாவிலேயே கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து, சுத்திகரித்து பெட்ரோலை மீண்டும் அதே நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது ரஷ்யத் துறைமுகங்களை வந்தடைய சுமார் 14,000 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இந்த நடைமுறை உள்நாட்டில் உற்பத்தி செய்வதைவிட மிக அதிக செலவு பிடிக்கும் ஒன்றாகும்.

ரஷ்யா நடத்திய இந்தப் போரால் தனது ராணுவத்தை நவீனப்படுத்த அடுத்த 20 ஆண்டுகள் வரை தேவைப்படும் என்று அமெரிக்கா, ஐரோப்பிய உளவுத்துறை நம்புகிறது. ரஷ்யா நடத்திவரும் போரால், அதன் பொருளாதார நிலைமை அதளபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. இது தவிர பொருளாதார தேக்கநிலை, வளர்ச்சிக் குறைவு கட்டத்தை ரஷ்யா சந்திக்கிறது. அதோடு கடுமையான பணவீக்கம், விலைவாசி உயர்வையும் ரஷ்யா வதைக்கிறது.
Zelenskyy & Putin

ரஷ்யாவும்- உக்ரைனுடனான போரும்

உக்ரைனுடன் கடந்த 2022ஆம் ஆண்டு ரஷ்யா தொடங்கிய போர் 4 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதில் ரஷ்யாவும், ரஷ்ய மக்களும் இழந்ததுதான் அதிகம். ரஷ்யா தரப்பில் கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள், காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டும். இரு நாடுகளிலும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டும் என சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உக்ரைனுடன் நடத்திய போரால் இதுவரை ரஷ்யா தரப்பில் 3.20 லட்சம் வீரர்கள் கொல்லப்பட்டு, காயமடைந்துள்ளனர். 8 ஆயிரம் ராணுவ வாகனங்கள், 2,700 டாங்கிகளை இழந்துள்ளது. ரஷ்யா நடத்திய இந்தப் போரால் தனது ராணுவத்தை நவீனப்படுத்த அடுத்த 20 ஆண்டுகள் வரை தேவைப்படும் என்று அமெரிக்கா, ஐரோப்பிய உளவுத்துறை நம்புகிறது. ரஷ்யா நடத்திவரும் போரால், அதன் பொருளாதார நிலைமை அதளபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. இது தவிர பொருளாதார தேக்கநிலை, வளர்ச்சிக் குறைவு கட்டத்தை ரஷ்யா சந்திக்கிறது. அதோடு கடுமையான பணவீக்கம், விலைவாசி உயர்வையும் ரஷ்யா வதைக்கிறது.

ரஷ்யப் பொருளாதாரம் எப்படி?

2026ஆம் ஆண்டு ரஷ்யாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்து, முக்கியத் துறைகள் சிக்கலில் உள்ளன. கடந்த ஆண்டு ரஷ்யப் பொருளாதாரம் 1 சதவீதமாகக் குறைந்த நிலையில் இந்த ஆண்டு 0.4 சதவீதமாகவே இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் வாழும் மக்களில் 60 சதவீதம் பேர் தங்களின் வாழ்வாதாரமும், தேசத்தின் பொருளாதாரமும் மோசமடைந்ததாகக் கருதுகிறார்கள். கடந்த 20 ஆண்டுகளில் இதுபோல் நடப்பது முதல்முறை என வேதனைப்படுகிறார்கள். 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வங்கிகளில் கடன் பெற்று தங்கள் திவாலானவர்கள் என்றும் அறிவித்துவிட்டனர். போர் தொடங்குவதற்கு முன் ரஷ்யாவின் சொத்துக்கள், தங்கம், அந்நியச் செலாவணி ஜிடிபியில் 6.5 சதவீதம் இருந்த நிலையில் 2026, ஏப்ரலில் இது 1.8 சதவீதமாகக் குறைந்துவிட்டது. ரஷ்யாவின் அந்நியச் செலாவணி காலியாகும் நிலை ஏற்பட்டு, முழுமையாக சீனாவை நம்பித்தான் இருக்கிறது.

போர் தொடங்குவதற்கு முன் ரஷ்யாவின் சொத்துக்கள், தங்கம், அந்நியச் செலாவணி ஜிடிபியில் 6.5 சதவீதம் இருந்த நிலையில் 2026, ஏப்ரலில் இது 1.8 சதவீதமாகக் குறைந்துவிட்டது. ரஷ்யாவின் அந்நியச் செலாவணி காலியாகும் நிலை ஏற்பட்டு, முழுமையாக சீனாவை நம்பித்தான் இருக்கிறது.

சுத்திகரிப்பு ஆலைகளைச் சிதைத்த உக்ரைன்

உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் தொடர்ந்து ஆயுதங்கள், நிதியுதவி அளிப்பதால், ரஷ்யாவுடன் சளைக்காமல் சண்டையிட்டு வருகிறது. சமீபத்தில் ரஷ்யாவின் பாஷ்கோர்டோஸ்தான் பகுதியில் இருந்த காஸ்ப்ரோம் நெப்டிகிம் சுத்திகரிப்பு ஆலையில் உக்ரைன் ட்ரோன் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இந்த ஆலை மட்டும் 2024ஆம் ஆண்டில் 72 லட்சம் டன் கச்சா எண்ணெய்யைச் சுத்திகரித்துள்ளது, ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பில் 2.7% இங்கு நடந்துள்ளது. பெட்ரோல், டீசலைத் தவிர்த்து, மண்ணெண்ணெய், அமோனியா, யூரியா உள்ளிட்ட பல்வேறு பெட்ரோ கெமிக்கல் பொருட்களையும் உற்பத்தி செய்துள்ளது. இது தவிர, கிராஸ்நோடார் கிராய் பகுதியில் இருக்கும் அபிப்ஸ்கி சுத்திகரிப்பு ஆலையிலும் உக்ரைன் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.

சமீபத்திய கணக்கெடுப்பின்படி, உக்ரைன் ட்ரோன் தாக்குதல்களால் ரஷ்யாவில் 5 கோடிக்கும் அதிகமான மக்களுக்குச் சேவை செய்யும் உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, தெற்கில் உள்ள கிரிமியாவிலிருந்து சைபீரியாவில் உள்ள ஓம்ஸ்க் வரை எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது.

சமீபத்திய கணக்கெடுப்பின்படி, உக்ரைன் ட்ரோன் தாக்குதல்களால் ரஷ்யாவில் 5 கோடிக்கும் அதிகமான மக்களுக்குச் சேவை செய்யும் உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, தெற்கில் உள்ள கிரிமியாவிலிருந்து சைபீரியாவில் உள்ள ஓம்ஸ்க் வரை எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது.

பெட்ரோல், டீசல் பற்றாக்குறை ரஷ்யாவின் பல பகுதிகளைப் பாதித்துள்ளது. ரஷ்யாவின் 11 மாகாணங்களில் பெட்ரோல், டீசல் வினியோகத்தில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன, பெட்ரோல் நிலையங்களில் மக்களின் கார்கள் நீண்ட வரிசையில் நின்று பெட்ரோல் வாங்க காத்திருக்கிறார்கள், பெட்ரோல் விலையும் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரேஷன் முறையில் பெட்ரோல் விற்பனை

ரஷ்யா தற்போது எதிர்கொண்டுவரும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு கடந்த 20 ஆண்டுகளில் இதுவரை எதிர்பாராத பிரச்னையாகும். இதனால், ரஷ்யாவில் உள்ள 55 மண்டலங்களிலும் பல்வேறு விதமான பெட்ரோல், டீசல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

1. வாடிக்கையாளர்களுக்குக் குறிப்பிட்ட அளவுதான் பெட்ரோல் விற்பனை

2. அதிகமாக எரிபொருள் வாங்குவதைத் தவிர்க்க சில்லரை விலை அதிகரிப்பு

3. பெட்ரோல் நிலையங்களுக்கு சப்ளை செய்வதில் கட்டுப்பாடு

முக்கிய சுத்திகரிப்பு நிலையங்களில் ஏற்படும் பாதிப்புகள், சிக்கல்கள் நாட்டின் பரந்த போக்குவரத்துத் துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

putin

ரஷ்யாவின் அவசர நடவடிக்கைகள் என்ன?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை உணர்ந்து சப்ளையைச் சீரமைக்க அவசர நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அதில் குறிப்பாக,

1. பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஏற்றுமதிக்கு ரஷ்யா தடைவிதித்துள்ளது.

2. இறக்குமதி செய்யப்படும் பெட்ரோல், டீசலுக்கு இறக்குமதி வரி குறைக்கப்பட்டு, மானியங்களள் அளிக்கப்பட்டுள்ளது.

3. எண்ணெய் சுத்திகரிப்பாளர்கள் தரம் குறைந்த எரிபொருட்களை சந்தையில் விற்பனை செய்ய அனுமதி

பற்றாக்குறையை இறக்குமதி சரிசெய்யுமா?

ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் ரஷ்யா மக்கள் தினசரி 1.15 லட்சம் முதல் 1.20 லட்சம் டன் பெட்ரோலைப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால், மக்களின் தேவையில் 65 % மட்டுமே உள்நாட்டு உற்பத்தி நிறைவுசெய்கிறது. தினசரி 40 ஆயிரம் முதல் 50ஆயிரம் டன் பற்றாக்குறையும், மாதத்துக்கு 12 லட்சம் டன் முதல் 13.50 லட்சம் டன் பெட்ரோல் பற்றாக்குறை ஏற்படும். இந்தியாவில் இருந்து வந்துள்ள 67,500 டன் பெட்ரோல் என்பது ஒன்றரை நாள் தேவையை மட்டுமே நிறைவு செய்யும். இந்தியாவில் இருந்து பெட்ரோல் இறக்குமதியை அதிகப்படுத்த ரஷ்யா கேட்டுக்கொண்டுள்ளது. ரஷ்ய நிறுவனங்களான ரோஸ் நெப்ட், காஸ்ப்ரோம் நெப்ட், லூகோயில் ஆகியவை இந்திய எண்ணெய் நிறுவனங்களிடம் கூடுதலாக பெட்ரோல் ஏற்றுமதிக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.

வெளிநாடுகளில் இருந்து மாதத்துக்கு 4 லட்சம் டன் பெட்ரோலை ரஷ்யா இறக்குமதி செய்து தேவையை நிறைவு செய்கிறது. அவ்வாறு இறக்குமதி செய்தாலும் மாதத்துக்கு 9.50 லட்சம் டன் பெட்ரோல் பற்றாக்குறையாக இருக்கும்.

வெளிநாடுகளில் இருந்து மாதத்துக்கு 4 லட்சம் டன் பெட்ரோலை ரஷ்யா இறக்குமதி செய்து தேவையை நிறைவு செய்கிறது. அவ்வாறு இறக்குமதி செய்தாலும் மாதத்துக்கு 9.50 லட்சம் டன் பெட்ரோல் பற்றாக்குறையாக இருக்கும். இந்தியாவுக்கு அடுத்தபடியாக பெலாராஸ் நாட்டில் இருந்து தினசரி 6ஆயிரம் டன் பெட்ரோலை ரஷ்யாவுக்கு அனுப்பி வருகிறது, இது மாதத்துக்கு 1.80 லட்சம் டன் பெட்ரோலை வழங்க முடியும், இதற்கிடையே 50 ஆயிரம் டன் பெட்ரோலை கஜகஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யவும் ரஷ்யா முயற்சி செய்து வருகிறது. ஜூலை மாத இறுதிக்குள் நிலைமை ஓரளவு மேம்படும் என்று ரஷ்ய அரசு நம்புகிறது. இருப்பினும் ரஷ்யாவில் பெட்ரோல் தட்டுப்பாடு தொடர்ந்து வருகிறது.