Stubbs excellent fielding
Stubbs excellent fielding pt desk
சிறப்புக் களம்

IPL | பறந்து வந்த பந்தை பாய்ந்து தடுத்த ஸ்டப்ஸ்..டெல்லி அணியின் வெற்றிக்கு வித்திட்ட தரமான பீல்டிங்!

PT WEB

DC vs GT

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஒரு சில போட்டிகளை தவிர பெரும்பாலான போட்டிகள் கடைசி நொடி வரை த்ரில் ஆகவே செல்கிறது. சில போட்டிகள் கடைசி பந்துவரை யார் பக்கம் வெற்றி என்பது தெரியாமல் ரசிகர்கள் பதைபதைப்பில் வைத்திருக்கிறது. அப்படியான ஒரு போட்டியாகத்தான் டெல்லி மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான நேற்றையப் போட்டி அமைந்தது.

Rishabh pant

8 சிக்ஸர்களுடன் 88 ரன்கள் குவித்த ரிஷப் பண்ட்:

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 224 ரன்கள் குவித்தது. பேட்டிங்கில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அக்ஸர் பட்டேல் 66 ரன்கள் எடுத்தார். கேப்டன் ரிஷப் பண்ட் 8 சிக்ஸர்களுடன் 88 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதுவும், முகேஷ் சர்மா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 4 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் அவர் 30 ரன்கள் விளாசினார்.

225 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடி குஜராத் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி தான். கேப்டன் கில் 6 ரன்னில் நடையைக்கட்டினார். சாஹா 39, சாய் சுதர்ஷன் 65 ரன்கள், டேவிட் மில்லர் 55 என ஆட்டம் குஜராத் பக்கம் சாய்வதற்கான வாய்ப்புகள் இருக்கவே செய்தது.

டெல்லி அணியின் வெற்றிக்கு வித்திட்ட ஸ்டப்ஸ்:

ஷாரூக்கான், தெவாட்டியா என கடைசி நேரத்தில் அனைவரும் சொதப்பியதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது. ஆனாலும், கடைசி நேரத்தில் வேகம் காட்டிய ரஷித் கான் பவுண்டரிகளாக விளாசி ஆட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருந்தார்.

கடைசி வரை சென்ற போட்டியில் கடைசி பந்தில் ஆறு ரன் அடிக்க வேண்டிய நிலை. ஆனால், அந்த பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்க டெல்லி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.

சிறப்பாக பேட்டிங் செய்த ரஷித் 11 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார்.

டெல்லி அணி வெற்றி பெற முக்கியமான காரணமாக அமைந்தது ரஷித் கான் எல்லைக்கோட்டிற்கு விளாசித் தள்ளிய பந்தை ஸ்டப்ஸ் தாவி பிடிக்க முயன்றார். பந்தை பிடிக்க முடியாத போதும் எல்லைக்கோட்டிற்குள் தள்ளிவிட்டு ஒரு ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தார். அந்த பந்தில் டெல்லி அணிக்கு 5 ரன்கள் தடுக்கப்பட்டது. அந்த ரன்கள் தான் டெல்லி அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

Stubbs

ஐபிஎல் ரசிகர்கள் இந்த பீல்டிங்கை வெகுவாக பாராட்டி வருகின்றனர். குறிப்பாக விராட் கோலி செய்த பீல்டிங்கை பதிவிட்டு அதேபோல் இருந்ததை சுட்டிக்காட்டினர்.

சிலர் சென்னை அணியின் தோல்விக்கு காரணமாக பீல்டிங்கை சுட்டிக்காட்டி தீபக் சாஹரை விமர்சித்தனர்.