model image chatgpt
சிறப்புக் களம்

பொட்டி ஸ்ரீராமுலு முதல் வாங்சுக் வரை.. இந்திய அரசியலைப் புரட்டிப் போட்ட உண்ணாவிரதங்கள்!

போராட்டக்காரர்கள் தங்களை மிகவும் உறுதிமிக்கவர்களாக கருதும்போது, போராட்டம் பலன் அளிக்கக்கூடியதாக மாறுகிறது. உறுதி வலுவடைவதால், போராட்டத்தைக் கைவிடும் பேச்சுக்கே இடமில்லாமல் போகிறது.

PT WEB

கட்டுரையாளர்: போத்தி ராஜ்

ஆங்கிலேயர்களுக்கு எதிராக சத்தியாக்கிரகப் போராட்டம்

அண்ணல் காந்தியடிகள், ஆங்கிலேயர்களுக்கு எதிராக கடைபிடித்த சத்தியாகிரகப் போராட்டத்தின் தீவிரமான வடிவம்தான் ‘காலவரையற்ற அல்லது சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்’. நல்ல நோக்கத்தை உறுதியாகக் கடைபிடித்தல்தான் சத்யாகிரகப் போராட்டத்தின் அர்த்தமாகும். நிலவும் ஒரு பிரச்னைக்கு ஆட்சியாளர்களின் உடனடி கவனத்தைக் கோரும் ஆற்றல்மிக்க வடிவமாக இந்தியாவின் வரலாற்றுப் பதிவுகளில் அகிம்சை போராட்டம் (சாத்வீக போராட்டம்) இடம்பெற்றுள்ளது.

model image
சத்தியாகிரகப் போராட்டக்காரர்கள் தங்களை மிகவும் உறுதிமிக்கவர்களாக கருதும்போது, போராட்டம் பலன் அளிக்கக்கூடியதாக மாறுகிறது. உறுதி வலுவடைவதால், போராட்டத்தைக் கைவிடும் பேச்சுக்கே இடமில்லாமல் போகிறது.

அண்ணல் காந்தியடிகள், ‘தென்ஆப்ரிக்காவில் சத்யாகிரகம்’ என்ற நூலில், சாத்வீக எதிர்ப்பு, சத்தியாகிரகம் ஆகியவற்றுக்கான வேறுபாட்டை பற்றிக் கூறுகையில், ”இங்கிலாந்தில், ‘சாத்விக எதிர்ப்பு’ போராட்டங்கள் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆரம்பித்து 20ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்தன. அரசை ஆயுதங்கள் கொண்டு, எதிர்க்க முடியாத பலவீனமான மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தார்கள். இவர்களின் எதிர்ப்பு வெறுமனே பதிவு மட்டுமே செய்யப்பட்டது. மாற்றங்கள் நிகழவில்லை. ஆனால், ‘சத்தியாகிரகம்’ என்பது ஆயுதப் போக்கைக் கைவிட்டு அமைதி வழியைத் தேர்ந்தெடுத்த பலவீனர்களின் வழிமுறை அல்ல; இது மாபெரும் பலசாலிகளின் வழிமுறை. சத்தியாகிரகப் போராட்டக்காரர்கள் தங்களை மிகவும் உறுதிமிக்கவர்களாக கருதும்போது, போராட்டம் பலன் அளிக்கக்கூடியதாக மாறுகிறது. உறுதி வலுவடைவதால், போராட்டத்தைக் கைவிடும் பேச்சுக்கே இடமில்லாமல் போகிறது. சத்தியாகிரகத்தில் வெறுப்புக்கும், வன்முறைக்கும் இடமே இல்லை” என்று விவரித்துள்ளார்.

இதையும் படிக்க: டெல்லி CJP போராட்டம் | அண்டை நாடுகளின் Gen Z கிளர்ச்சிபோல் மாறுகிறதா? இயக்குவது யார்.. தாக்கம் என்ன?

காவிரிக்காக ஜெயலலிதா உண்ணாவிரதம்

இந்தியாவில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க, கோரிக்கை நிறைவேற வெளிப்படுத்தும் தீவிரமான சத்யாகிரகப் போராட்டமே, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம். தமிழகத்திலும் அண்டை மாநிலங்களில் ஏராளமான அரசியல் தலைவர்கள் பல்வேறு காலகட்டங்களில் தங்கள் கோரிக்கை நிறைவேற காலவரையற்ற உண்ணாவிரதத்தை கடைப்பிடித்து, அதில் வெற்றியும் கண்டுள்ளனர்.

தமிழகத்திலும் அண்டை மாநிலங்களில் ஏராளமான அரசியல் தலைவர்கள் பல்வேறு காலகட்டங்களில் தங்கள் கோரிக்கை நிறைவேற காலவரையற்ற உண்ணாவிரதத்தை கடைப்பிடித்து, அதில் வெற்றியும் கண்டுள்ளனர்.
model image

1993ஆம் ஆண்டு, ஜூலை 18ஆம் தேதி அப்போது முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதா, கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடக் கோரியும், காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்தக் கோரியும், சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் சமாதி அருகே 4 நாட்கள் தீவிர உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். மத்திய நீர்வளத்துறை அமைச்சர் வி.சி.சுக்லா, ஆளுநர் சென்னா ரெட்டி ஆகியோர் ஜெயலலிதாவிடம் பேச்சு நடத்தி, காவிரி நதிநீர் வரவைக் கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து ஜூலை 21ஆம் தேதி போராட்டம் முடிவுக்கு வந்தது.

இதையும் படிக்க: மேற்கு வங்கத்தின் புதிய பெண் சக்தி.. சரிந்தது மம்தா சாம்ராஜ்ஜியம்.. ஒரே மாதத்தில் அசுர மாற்றம்?

பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம்

தெலுங்கு மொழி பேசும் மக்களுக்காக தனி மாநிலம் கேட்டு கடந்த 1952ஆம் ஆண்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் பொட்டி ஸ்ரீராமுலு ஈடுபட்டார். அது, இந்திய வரலாற்றில் மிக முக்கியமான உண்ணாவிரதமாக இன்றும் பார்க்கப்படுகிறது. தெலுங்கு பேசும் மக்களுக்காக மொழி அடிப்படையில் மாநிலம் கேட்டு, 58 நாட்கள் தீவிரமான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீராமுலு 1952, டிசம்பர் 15ஆம் தேதி உயிரிழந்தார்.

ஆந்திரப் பிரதேசம்

இவரின் உயிரிழப்பால் அப்போது பிரிக்கப்படாத சென்னை மாகாணத்தில் பெரிய போராட்டம் நடந்தது, வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. அதன்பின் அப்போது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசு 1953இல் ஆந்திரப்பிரதேச மாநிலத்தை தனியாக உருவாக்கியது.

ஐரோம் ஷர்மா

மணிப்பூரின் ’இரும்புப் பெண்மணி’ ஐரோம் ஷர்மா

மணிப்பூரில் ஆயுதப்படைகளுக்கான சிறப்புச் சட்டத்தை எதிர்த்து கடந்த 2000ஆம் ஆண்டு நவம்பரில் ஐரோம் ஷர்மிளா உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப்படையினரால் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும், ஏறக்குறைய 16 ஆண்டுகள் உண்ணாவிரதத்தில் ஐரோம் ஷர்மிளா ஈடுபட்டார். ஒருகட்டத்தில் அவருக்கு வலுக்கட்டாயமாக மூக்குவழியாக குழாய் மூலம் உணவு வழங்கப்பட்டு உயிர்பிழைக்க வைக்கப்பட்டது. பலமுறை தற்கொலை முயற்சி வழக்கில் ஷர்மிளா கைது செய்யப்பட்டிருந்தார்.

இதையும் படிக்க: முடிவுக்கு வரும் ‘மராட்டிய கர்ஜனை'.. சிவசேனாவின் வளர்ச்சியும் சரிவும்.. ஒரு பார்வை!

ஆயுதப்படை சிறப்புச் சட்டத்தை ரத்து செய்யுமாறு ஷர்மிளா கடைசிவரை குரல் கொடுத்தபோதிலும், அவரது போராட்டத்தின் பெரும்பகுதி காலத்தில், அந்தச் சர்ச்சைக்குரிய சட்டம் நடைமுறையில் இருந்தது. ஆனால், ஷர்மிளாவின் பிரசாரம் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் மற்றும் ராணுவப் பலத்தைப் பயன்படுத்துவது குறித்த அவரின் பேச்சு தேசிய அளவிலான விவாதத்தை ஏற்படுத்தி, மாற்றத்துக்கு வழி ஏற்படுத்தி, சர்வதேச கவனத்தை ஈர்த்தது. இதனால்தான் அவர் மணிப்பூரின் ’இரும்புப் பெண்’ என்று அழைக்கப்பட்டார்.

அன்னா ஹசாரேவும் ஊழலுக்கு எதிரான மசோதாவும்

காங்கிஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2ஆவது முறை ஆட்சியில் ஊழல் மலிந்திருந்ததைக் கண்டித்தும், ’ஜன் லோக்பால்’ சட்டத்தைக் கொண்டுவரக் கோரி 2011ஆம் ஆண்டு சமூக ஆர்வலரும், காந்தியவாதியான அண்ணா ஹசாரே டெல்லி ராம் லீலா மைதானத்தில் 13 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தப் போராட்டத்தில்தான் ’ஊழலுக்கு எதிரான இந்தியா’ (ஐஏசி) பிரசாரம் தொடங்கி, சமானியர்கள் காங்கிரஸ் அரசுக்கு எதிராகத் திரண்டனர். ஹசாரேயின் கோரிக்கையை ஏற்று ஜன் லோக்பால் மசோதாவை காங்கிரஸ் அரசு நிறைவேற்றியது.

இதையும் படிக்க: சிவன் கோயிலா.. கல்லறையா? எழுந்த சர்ச்சைகள்.. பாய்ந்த வழக்குகள்.. தாஜ்மஹாலைச் சுற்றி நடந்தது என்ன?

சுற்றுச்சூழல் நீதிக்காக மேதா பட்கரின் போராட்டம்

குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் வழியாகச் செல்லும் நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்படும் பெரிய அணைகளுக்கு எதிராக 1985-இல் தொடங்கப்பட்ட ஒரு மாபெரும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் இயக்கம்தான் ’நர்மதா நதியை காப்போம்’ இயக்கமாகும். சமூக ஆர்வலர் மேதா பட்கர் தலைமையில், பழங்குடியினர், விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இணைந்து இந்த இயக்கத்தை முன்னெடுத்தனர்.

காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். மேதா பட்கரின் நீண்டகால உண்ணாவிரதத்தால், அவரின் கோரிக்கைகளை உன்னிப்பாக ஆய்வு செய்யும் நிர்பந்தத்துக்கு நீதிமன்றங்கள், அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் வந்தன.
மேதா பட்கர்

இதில் சமூக ஆர்வலர் அணை கட்டுவதை எதிர்த்தும், நியாயமான இழப்பீடு தரவேண்டும்,சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் அதற்குச் சட்டப்பாதுகாப்பு வேண்டும் எனக் கோரி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். மேதா பட்கரின் நீண்டகால உண்ணாவிரதத்தால், அவரின் கோரிக்கைகளை உன்னிப்பாக ஆய்வு செய்யும் நிர்பந்தத்துக்கு நீதிமன்றங்கள், அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் வந்தன.

இதையும் படிக்க: அடுத்த இலக்கு ‘பாப் எல் மன்தீப்’ நீரிணை! உலக எண்ணெய் வர்த்தகத்தை முடக்க ஈரான் திட்டம்?

திருப்புமுனையான மம்தாவின் 26 நாட்கள் உண்ணாவிரதம்

மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் விவசாயிகளிடம் இருந்து நிலங்களைப் பறித்து, டாடா நிறுவனத்தின் நானோ தொழிற்சாலை கட்ட, ஆளும் இடதுசாரிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி 26 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

மம்தா பானர்ஜி

மம்தாவின் இந்தப் போராட்டம்தான் மாநிலத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்துக்கு இட்டுச்சென்றது, 34 ஆண்டுகால இடதுசாரிகள் ஆட்சி மம்தாவின் போராட்டத்தால் முடிவுக்கு வந்தது, அடுத்ததாக 15 ஆண்டுகள் தொடர்ந்து மம்தா ஆட்சியில் அமரவும், சிங்கூர் உண்ணாவிரதப் போராட்டம் அவருக்கு திருப்புமுனையாக இருந்தது.

இதையும் படிக்க: பாகிஸ்தானிலிருந்து விடுதலை! ‘பலுசிஸ்தான் தனி தேசம்’ அங்கீகரிக்கப்படுமா? இந்தியா, சீனா நிலை என்ன?

சந்திரசேகர் ராவின் தனி மாநிலம் போராட்டம்

ஆந்திரப் பிரதேசத்துக்காக பொட்டி ஸ்ரீராமுலு போராட்டம் நடத்திய நிலையில், அந்த மாநிலத்தை உடைத்து தனித் தெலங்கானா மாநிலம் கேட்டு கே.சந்திரசேகர் ராவ் 2009, நவம்பர் 29ஆம் தேதி முதல் 11 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். அவரின் உறுதியான நோக்கம், தீவிரமான உண்ணாவிரதம், மாநிலம் முழுவதும்பரவிய வன்முறை, மாணவர்கள் போராட்டம், கடையடைப்பு, அமைதி பாதிக்கப்பட்டது. இதைக் கவனித்த மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசு, மாநிலத்தைப் பிரித்து தனித் தெலங்கானா அமைக்க முடிவு செய்தது. 2014ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதி ஆந்திராவில் இருந்து பிரிந்து தெலங்கானா மாநிலம் உருவாகியது.

கங்கை நதிக்காக சாதுக்களின் போராட்டம்

சுற்றுச்சூழல் ஆர்வலரும், கான்பூர் ஐஐடி பேராசிரியருமா ஜிடி அகர்வால் பின்னாளில், ஸ்வாமி கியான் ஸ்வரூப் சதாந்த் என மாறினார். இவர் கங்கை நதியின் புனிதத்தை காக்க வேண்டும், சுற்றுச்சூழலை மேம்படுத்த தனியாக சட்டம் இயற்ற வேண்டும் எனக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். ஹரித்வாரில் உள்ள மாத்ரி சதன் ஆசிரமத்தில் தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கி 111 நாட்கள் உண்ணா நோன்பில் ஈடுபட்டும், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவில்லை, 2018ஆம்ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். கடைசிவரை இவரின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்காதது கடும் விமர்சனத்தை கொண்டு வந்தது.

இதையும் படிக்க: சிறப்புக்கட்டுரை | அடுத்த ஐன்ஸ்டீன்.. 12 வயதில் குட்டி விமானம்.. யார் இந்த சப்ரினா பாஸ்ட்டர்ஸ்கி?

சோனம் வாக்சுக்கின் ‘காலநிலை உண்ணாவிரதம்’

2019ஆம் ஆண்டில் யூனியன் பிரதேசமாக லடாக் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, அரசியலமைப்பு ரீதியான பாதுகாப்புக்கு வலியுறுத்தி, சமூக ஆர்வலரும், கல்வியாளருமான சோனம் வாங்சுக் 2004ஆம் ஆண்டு, மார்ச் மாதத்தில் 21 நாள் ‘காலநிலை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

Sonam Wangchuk

அரசியலமைப்புச் சட்டம் 6ஆவது பட்டியலில் பழங்குடியினர் நிலம், வளங்கள், இமாலய சூழலைச் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினார். கார்கில் ஜனநாயகக் கூட்டணியின் ஆதரவுடன் நடந்த வாங்சுக்கின் இந்த உண்ணாவிரதப் போராட்டம், நில உரிமைகள், உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த நாடு தழுவிய கவனத்தை ஈர்த்தது. இதே வாங்சுக்தான், தற்போது டெல்லியில் 25 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதையும் படிக்க: சிறப்புக்கட்டுரை |டேட்டா சென்டருக்கும் தண்ணீருக்கும் என்ன தொடர்பு? எதற்காக நீர் தேவை? சவால்கள் என்ன?