கல்வி

11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

EllusamyKarthik

9 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் 11ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

பள்ளிக் கல்வி ஆணையர் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் 9 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் 11ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இடம்பெற்றுள்ளன. இதன்படி 2019- 2020 ஆம் கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு ஆகிய இரண்டு தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார்களோ அந்த மதிப்பெண்ணை கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும். காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் இரண்டிலும் கலந்து கொண்டு எந்த பாடத்தில் தேர்ச்சி பெறவில்லையோ அந்த பாடத்திற்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணை வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல இவ்விரு தேர்வுகளுக்கும் வருகை தராத மாணவர்களுக்கும் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணை வழங்கலாம். காலாண்டு அல்லது அரையாண்டு தேர்வுகளில் பங்கு பெற்று ஏதேனும் ஒன்றில் மட்டும் தேர்ச்சி பெற்றிருந்தால் அந்த மதிப்பெண்ணை கணக்கில் எடுத்து கொள்ளலாம் என பள்ளிக் கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.