முதியவர் போக்சோவில் கைது pt desk
குற்றம்

விழுப்புரம் | 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - 60 வயது முதியவர் போக்சோவில் கைது

விழுப்புரம் அருகே எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 60 வயது முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

PT WEB

செய்தியாளர்: காமராஜ்

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நமச்சிவாயம் (60). இவர், தனது வீட்டின் அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக சொல்லப்படுகிறது. உடனடியாக சிறுமி தப்பித்து வந்து தனது பெற்றோரிடத்தில் இதுபற்றி தெரிவித்துள்ளார்.

Arrested

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், இது தொடர்பாக விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் முதியவர் நமச்சிவாயத்தை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.