இளைஞர் கைது pt desk
குற்றம்

திருச்சி | பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இன்ஸ்டா வீடியோ பதிவு - இளைஞர் கைது

மணப்பாறை அருகே கத்தி மற்றும் நாட்டு வெடியை வைத்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இன்ஸ்டாவில் வீடியோ பதிவிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

PT WEB

செய்தியாளர்: எஸ்.காதர் மொய்தீன்,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆ.களத்துப்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (25). இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கத்தியை வைத்து, அருவா பிடிக்கணும்னு தலைல எழுதிட்டு அதை யாரும் தடுக்க முடியாது, நம்மல்லாம் யார்ட்டலும் மோத மாட்டோம். நம்மள மோதுனா அவ வம்சமே இல்லாம கருவறுத்துருவோம், அது தான் நம்மள பொறுத்த வரைக்கும் என்று ஒரு ரீல்ஸ்.

Arrested

அடுத்த ரீல்ஸில் வெட்டு குத்து எல்லாம் கிடையாது ஒன்லி ஒன் வெடிகுண்டு துப்பாக்கி என்று நாட்டு வெடி குண்டை வைத்து ஒரு வீடியோவும்,, கையில் கத்தியோடு ஒரு பாட்டையும் வைத்து வீடியோ பதிவு செய்துள்ளார். பொதுமக்களை மிரட்டி அச்சுறுத்தும் வகையில் இந்த இன்ஸ்டா பதிவு இருந்த நிலையில், மணப்பாறை போலீசார், வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். இந்த சம்பவம் அங்க பரபரப்பை ஏற்படுத்தியது.