செய்தியாளர்: சுரேஷ் குமார்
காங்கேயம் அருகே அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவர் சிவகுமார் (54). இவர், மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட மாணவி உறவினரிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உறவினர் காவல்துறை கட்டுப்பாட்டு அறை புகார் எண் 100க்கு புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஊதியூர் மற்றும் காங்கேயம் அனைத்து மகளிர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் அடிப்படையில் ஆசிரியர் சிவக்குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.