செய்தியாளர்: ஹாலித் ராஜா
திருப்பூர் கருப்பகவுண்டம் பாளையம் பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் வங்கதேச இளைஞர்கள் முறைகேடாக தங்கி பணியாற்றி வருவதாக, வீரபாண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது உரிய ஆவணங்கள் இன்றி முறைகேடாக திருப்பூரில் தங்கி தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ராபின் {ஹசைன் (32) இஸ்ஸாக் அலி (25) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், இருவரும் ஓராண்டாக தங்கி பணியாற்றி வருவது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர். மேலும் வங்கதேச இளைஞர்கள் முறைகேடாக தங்கியுள்ளனரா என பல்வேறு பகுதிகளிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.