இளைஞர் கைது pt desk
குற்றம்

திருப்பத்தூர் | தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது - 6 வாகனங்கள் பறிமுதல்

வாணியம்பாடியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்துள்ள போலீசார், 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள முனீஸ்வரன் ஆலயம் அருகே நகர காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக சந்தேகத்திற்குரிய வகையில் வந்த இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

CCTV footage

அதில், அந்த இளைஞர், வாணியம்பாடி, பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த ஜெய் சூர்யா என்பதும் இவர் வாணியம்பாடி நகர் பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து உடனடியாக ஜெய் சூர்யாவை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து அவரிடம் இருந்து 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த நகர காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.