செய்தியாளர்: சுரேஷ்
வெளி மாநிலத்தில் இருந்து திருப்பத்தூர் மாவட்டத்திற்கு காரில் கஞ்சா கடத்தி வருவதாக வந்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தோரணம்பதி சோதனை சாவடி அருகே வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த காரில் சுமார் 20 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்தவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பொம்மி குப்பம் பகுதியைச் சேர்ந்த முருகன் அவரது மனைவி மஞ்சுளா மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜவேல் அவரது மனைவி ஜோதி ஆகியோர் என்பது தெரியவந்தது.
இவர்கள் நான்கு பேரும் வெளிமாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது இதையடுத்து கஞ்சா பறிமுதல் செய்த போலீசார்இ கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து நான்கு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.