3 பேர் கைது pt desk
குற்றம்

திருவள்ளூர் | ரகசிய தகவலை அடுத்து அதிரடி சோதனை - ரயிலில் கடத்தப்பட்ட 9 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆந்திராவில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்திய இளைஞர்கள் 3 பேரை வடக்கு மண்டல ஐஜி தலைமையிலான தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்து 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

PT WEB

செய்தியாளர்: B.R.நரேஷ்

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு ரயில் மற்றும் பேருந்துகளில் கஞ்சா குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக வழக்கு மண்டல ஐஜிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அவரது தலைமையிலான தனிப்படை உதவி காவல் ஆய்வாளர் பார்த்திபன் தலைமையிலான போலீசார், நேற்று இரவு திருவாலங்காடு ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ரயில் நிலையத்தில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்த 3 இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கஞ்சா பதுக்கி கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆந்திராவில் கஞ்சாவை வாங்கி ரயில் மூலம் கடத்தியது தெரியவந்தது. இளைஞர்கள் 3 பேர் மற்றும் கஞ்சாவை திருத்தணியில் உள்ள ஆர்கே பேட்டை மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப் பதிவு செய்து விசாரணையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (19), நிர்மல் குமார் (26), சூர்யா (28) ஆகிய 3 இளைஞர்களை கைது செய்து, 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.