கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது pt desk
குற்றம்

தேனி | பாதையை மறித்து வீடு கட்டிய விவகாரம் - கணவன் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

ஆண்டிபட்டி அருகே பாதையை மறித்து வீடு கட்டியதில் ஏற்பட்ட தகராறு.

PT WEB

செய்தியாளர்: மலைச்சாமி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைகுண்டு அருகே உள்ள தேவராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூலித் தொழில் செய்யும் தம்பதிகளான கண்ணன் கலாமணி ஆகியோர் இரண்டு குழந்தைகளோடு வசித்து வருகின்றனர். இந்நிலையில், இவர்களது வீட்டிற்கு அருகே செல்லும் பொதுபாதையை மறித்து அருகே இருந்த அழகுராஜா என்ற நபர் வீடு கட்டியதாகக் கூறப்படுகிறது.

Arrested

இதனால் இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த அழகுராஜா கட்டையால் கண்ணனை கடுமையாக தாக்கியதோடு, அவரது மனைவி கலாமணியின் கழுத்தை நெறித்து இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது இதையடுத்து கணவன் மனைவி இருவரும் கடமலைகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பேரில் அழகுராஜாவை கைது செய்த காவல்துறையினர் விசாரணைக்குப் பிறகு அவரை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.