செய்தியாளர்: ஆர்.ரவி
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள அத்தனூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விஜயகுமார் (35) - இளவரசி (30). தும்பதியர். இவர்களுக்கு விக்னேஷ் (6) சதீஷ்குமார் (3) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு வீட்டின் அருகில் உள்ள செப்டிக் டேங்கில்இரு குழந்தைகளும் சடலமாக கிடந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த விஜயகுமாரின் உறவினர்கள் இரு குழந்தைகளையும் மீட்டனர். இதையடுத்து குடும்பத் தகராறு காரணமாக இளவரசி தனது இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டதாக புகார் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட வாழப்பாடி போலீசார், குழந்தைகளின் தாய் இளவரசியை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் உறிவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.