செய்தியாளர்: மோகன்ராஜ்
சேலம் அருகே 9 வயது சிறுமிக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வெங்கடேசன் (50) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இதேபோல் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை பக்கத்து வீட்டில் வசிக்கும் செல்வம் (55) என்பவர் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், செல்வத்தை கைது செய்தனர்...