செய்தியாளர்: மோகன்ராஜ்
சேலம், இரும்பாலை சாலையில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் மாணவிகள் சிலர் மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு புகார் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், கல்லூரியில் பணி புரியும் ஆய்வக பணியாளர் வேலு (57) என்பவர் தங்களுக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுப்பதாக குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தார்கள்.
அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள தனி குழு அமைத்து கல்லூரி முதல்வர் தேவி மீனாள் உத்தரவிட்டிருந்தார். அந்தக் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வேலு மீதான குற்றத்தை உறுதி செய்து அதற்கான அறிக்கையை தலைமைக்கு அனுப்பினர். இதனை அடுத்து மருத்துவக் கல்லூரி இயக்குனர் ஆய்வக பணியாளர் வேலுவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.