காவலர் சஸ்பெண்ட் pt desk
குற்றம்

சேலம் | சிறைச்சாலை பேக்கரியில் பண முறைகேடு - இரண்டாம் நிலை காவலர் சஸ்பெண்ட்

சேலம் சிறைச்சாலையில் பேக்கரி பண்டங்களை விற்பனை செய்த தொகையில் முறைகேடு செய்த இரண்டாம் நிலை காவலர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

PT WEB

செய்தியாளர்: மோகன்ராஜ்

சேலம் மத்திய சிறையில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வருபவர் சுப்ரமணி. இங்கு சிறைவாசிகளைக் கொண்டு பல்வேறு வகையான பேக்கரி பண்டங்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுகின்றன. இந்த பொருட்களை சிறைக்காவலர் சுப்ரமணி, சிறைவாசிகளுக்கு கொடுத்து அதற்கு உண்டான தொகையை வசூலித்துள்ளார்.

இதையடுத்து அந்த தொகையை சிறை வரவு செலவு கணக்கில் காட்டாமல் தனது கணக்கில் பெற்று ரூ. 1,80,000 வரை முறைகேடு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சிறைத்துறை டிஐஜி உத்தரவின் பேரில் சிறைக்காவலர் சுப்ரமணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.