வீட்டின் கதவை உடைத்து 40 சவரன் நகைகள் கொள்ளைpt desk
தமிழ்நாடு
கரூர் | உதவி பத்திரப்பதிவு அலுவலர் வீட்டின் கதவை உடைத்து 40 சவரன் நகைகள் கொள்ளை
கரூரில் உதவி பத்திரப்பதிவு அலுவலர் வீட்டின் கதவை உடைத்து 40 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
செய்தியாளர்: வி.பி. கண்ணன்
கரூர் காந்திகிராம் பகுதியைச் சேர்ந்தவர் மதன இலக்கியா. இவர், வெள்ளியணை சார் பதிவாளர் அலுவலகத்தில் உதவி பத்திரப்பதிவு அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் திலீபன் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், இவர்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தனர். இதையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தன. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், வீட்டினுள் சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டில் இருந்த 40 சவரன் நகைகள் திருடு போனது தெரியவந்தது.
இது குறித்து அளித்த புகாரின் பேரில் பசுபதிபாளையம் காவல் நிலைய போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.