தந்தை வெட்டிக் கொலை - மகன் உட்பட மூன்று பேர் கைது pt desk
குற்றம்

சேலம் | சொத்து தகராறில் தந்தை வெட்டிக் கொலை - மகன் உட்பட மூன்று பேர் கைது

ஓமலூர் அருகே சொத்து தகராறில் தந்தையை வெட்டிக் கொலை செய்த மகன் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

PT WEB

செய்தியாளர்: தங்கராஜூ

தர்மபுரி மாவட்டம் மணலூரை சேர்ந்தவர்கள் பொன்னுசாமி - கவுரம்மாள் தாம்பதியர். மூத்த தம்பதியர்களான இவர்களுக்கு 3 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், மூத்த தம்பதியர் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா வி.மேட்டூரில் உள்ள ஒரு கல்குவாரியில் தங்கி வேலை செய்து வந்தனர்.

இவர்களுக்கு சொந்தமாக உள்ள 2.3 ஏக்கர் நிலத்தில், 2-வது மகன் சின்னசாமி தாய் தந்தையிடம் தனது பாகத்தை கேட்ட நிலையில், அவர்கள் கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சின்னசாமி தனது நண்பர்களுடன் சேர்ந்து வெட்டியுள்ளார். இதில், தந்தை பொன்னுசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாய் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சின்னசாமி, சீனிவாசன், ஆகாஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.