\
மங்காத்தா 2
மங்காத்தா 2புதிய தலைமுறை

வருகிறதா ‘மங்காத்தா 2’?அஜித் - வெங்கட் பிரபு திடீர் சந்திப்பின் பின்னணி என்ன?

படப்பிடிப்புக்காக அஜர்பைஜானில் உள்ள நடிகர் அஜித்குமாரை இயக்குநர் வெங்கட்பிரபு நேரில் சந்தித்தார்.
Published on: 

மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வரும் அஜித், படப்பிடிப்பிற்காக அஜர்பைஜானில் நாட்டில் உள்ளார். இயக்குநர் வெங்கட்பிரபு, விஜய்யின் GOAT படத்தின் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அஜித் - வெங்கட் பிரபு சந்திப்பு
அஜித் - வெங்கட் பிரபு சந்திப்பு

இந்த நிலையில், அஜர்பைஜான் சென்ற வெங்கட்பிரபு அங்கு அஜித்தை நேரில் சந்தித்துள்ளார். அஜித்துடன் எடுத்த புகைப்படத்தையும் எக்ஸ் தளத்தில் வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளார். இருவரது கூட்டணியில் வெளியான மங்காத்தா படம் பெரும் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

மங்காத்தா 2
நாளை வெளியாகுமா இந்தியன் 2? இன்று நீதிமன்றத்தில் விசாரணை!

இந்த நிலையில், அஜித்தை வெங்கட் பிரபு சந்தித்தது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com