Police station pt desk
குற்றம்

புதுக்கோட்டை | பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - தற்காலிக உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது

புதுக்கோட்டை அருகே அரசுப் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தற்காலிக உடற்கல்வி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

PT WEB

செய்தியாளர்: நீதி அரசன் சாதிக்

புதுக்கோட்டை அருகே உள்ள அரசுப் பள்ளியில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியராக அடைக்கலம் (45) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

Arrested

இதுகுறித்து பள்ளி மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், தற்காலிக உடற்கல்வி ஆசிரியர் அடைக்கலத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.