செய்தியாளர்: அருளானந்தம்
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பாரதி நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் முன்பு கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் தேனி மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவி காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பள்ளியின் முன்புள்ள சாலையில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த மூன்று இளைஞர்களிடம் சோதனை செய்தனர்.
அப்போது அவர்களிடம் கஞ்சா பொட்டலம் விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் பெரியகுளம் தென்கரை பகுதியைச் சேர்ந்த பாலாஜி, பிரேம்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து தப்பியோடிய ஆகாஷ். ஏன்பவரை போதை தடுப்பு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களையும் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்து போதை தடுப்பு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் இருந்து 100-க்கும் மேற்பட்ட கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்துள்ளனர்.